என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
புதுப்பாளையம் உள்வட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதூர் செங்கம் கிராமத்தில் உள்ள புதூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கண்ட கோவில் வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை விழா நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, திருவண்ணாமலை அண்ணாதுரை எம்.பி., கலசப்பாக்கம் சரவணன் எம்.எல்.ஏ, புதுப்பாளையம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுந்தரபாண்டியன், நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை பரம்பரை கோவில் அறங்காவலர்கள் ஜெயக்குமார் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர், செங்கம் தாசில்தார், முனுசாமி புதுபாளையம் வருவாய் ஆய்வாளர் (பொ), சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள், செங்கம் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊர் முக்கியஸ்தர்கள் தலைவர் சங்கர், தொண்டரணி குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.






