என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மூதாட்டி அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போளூர்:

    போளூர் அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசி அம்மாள் (வயது 85). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். மகன் சின்ன பையனுடன் வசித்து வந்தார். இவர்களது விவசாய நிலம் அந்தப் பகுதி ஏரிக்கரை ஓரம் உள்ளது.

    நிலத்திற்கு எதிரே உள்ள சமுதாயக்கூடத்தில் காசியம்மாள் தினமும் இரவில் படுத்து உறங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மூதாட்டி அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அதிகாலையில் அவரது மகன் வந்து பார்த்தபோது காசி அம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    மூதாட்டி அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலில் மின் வயர் சுற்றிய நிலையில் இறந்து கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்க லம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னு சாமி மகன் பிரபாகரன் (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள விவ சாய நிலத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் .

    கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற பிரபாகரன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அவர் வேலை செய்து வந்த நிலத்தில் உள்ள மின் மோட்டார் அறையில் பிணமாக கிடந்தார்.

    இதனை தொடர்ந்து பொன்னூர் போலீசார் அங்கு சென்று விசா ரணை மேற்கொண்டனர். இதில் பிரபாகரனின் காலில் மின் வயர் சுற்றிய நிலையில் இருந்தது.

    எனவே மின்சாரம் தாக்கி அவர் இறந்தது தெரிய வந்தது . இதைத்தொடர்ந்து பிரபாகரனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .

    • 2 வாலிபர்கள் கைது
    • போலீசார் விசாரணை

    தூசி:

    செய்யாறு தாலுகா உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் .

    இவர் ஆக்கூர் கூட்டு ரோட்டில் பங்க் கடை வைத்துள்ளார் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது , கடை முன்பு இருந்த இரும்பு வளையத்தை உடைத்து உள்ளே சென்று கடையில் வைத்திருந்த பொருட்கள் திருட்டுப் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீதுதூசிபோலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் மகன் கோபால் சாமி ( வயது 19 ), ஏழுமலை மகன் தேவராஜ் ( 19 ) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
    • பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள 1150 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    அந்த சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் 200 பயிற்சி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது.

    திருவண்ணாமலையில் நாளை மாலை ஊர்வலம் நடைபெற உள்ளது. காந்தி சிலை அருகே விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் புறப்படுகிறது. அந்த சிலைகள் தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரை குளத்தில் கரைக்கப்பட உள்ளன.

    அதேபோல் வந்தவாசி மற்றும் செய்யாறில் வருகிற 3-ந் தேதியும், ஆரணியில் 4-ந் தேதியும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோணிராயன்குளம், வந்தவாசி 5 கண் வாராபதி, பூமா செட்டிகுளம், போளூர் ஏரி ஆகிய நீர் நிலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வழிகாட்டுதல் படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளிபட்டு ஊராட்சிக்குட்பட்ட வீட்டுவசதி வாரியம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அதிகாரி சம்பத் சாந்தா தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர்.

    சாந்தாவிற்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகச்சைக்காக நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதே போல அதே பகுதியில் உள்ள செந்தில்வேல் குடும்பத்துடன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    தகவலறிந்த வந்த ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணா மலையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகையை சேகரித்தனர். பின்னர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆரணியில் ஓரே நேரத்தில் அடுத்தடுத்து வீட்டில் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கிறிஸ்தவ பள்ளியில் படித்த குழந்தை மரணம் எய்தியதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றதாக அழகிரி குற்றச்சாட்டு
    • கள்ளக்குறிச்சி மாணவி விஷயத்தில் பாஜகவினர் ஆர்வம் காட்டாததன் மர்மம் என்ன?

    திருவண்ணாமலை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.

    "கனியாமூர் பள்ளி மாணவி மரணத்திற்கு மட்டும் ஏன் அவர்கள் கருத்து சொல்லவில்லை? அல்லது ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? முறையான நீதி விசாரணை வேண்டும் என ஏன் கேட்கவில்லை. எதற்காக அவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை?

    ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படித்த ஒரு குழந்தை மரணம் எய்தியதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். அந்த குழந்தை விஷயத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டியவர்கள், கள்ளக்குறிச்சி மாணவி விஷயத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மம் என்ன? எதற்காக பாஜகவினர் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? எதற்காக ஆர்எஸ்எஸ் மவுனமாக இருக்கிறது? என்பதை அறிய தமிழ்நாடு காங்கிரஸ் விரும்புகிறது' என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.

    • நீர்மட்டம் 117 அடியாக பராமரிப்பு
    • அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது

    திருவண்ணாமலை:

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,360 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 117 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணையில் 7,875 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

    59. 04 அடி உயரம் உள்ள குப்ப நத்தம் அணையின் நீர்மட்டம் 57 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. அணைக்கே வினாடிக்கு 280 கன அடி தண்ணீர் செய்யாற்றில் வெளியேற்றப்படுகிறது. அணையில் 644.30 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது அணைப்பகுதியில் 28.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 18.37 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 97 கன அடி தண்ணீர் வருகிறது.அணையில் இருந்து 87 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 62.32 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

    அணை பகுதியில் 110.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 50.15 அடியை எட்டியுள்ளது.அணைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • முக்கிய வீதிகளில் பவனி
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சதுர்த்தி திதி தொடங்கியதையொட்டி சம்மந்த விநாயகருக்கு தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக தயார் நிலையில் உள்ளன. பூஜை பொருட்கள் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கான திதி நேற்று மாலை 3.26 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 2.45 மணிக்கு நிறைவடைகிறது.

    அதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை விநாயகர் வழிபாடு தொடங்கியது. அண்ணாமலையார் கோவில் ஆன்மிக மரபுப் படி, சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், சஷ்டி போன் றவற்றின் உற்சவ வழிபாடு இரவில் நடப்பது வழக்கம். திதி அமையும் இரவில், உற்சவம் நடத்தப்படுவது இக்கோவிலில் மட்டுமே நடைபெறும் வழிபாட்டு முறையாகும்.

    அதன்படி, அருணாசலேஸ்வரர் கோவில் 3- ம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயக ருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மேலும், தங்கக்கவச அலங்காரத்தில் எழுந்தருளி விநாயகர் பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து விநாயகரை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மாடவீதியில் பவனி வந்து அருள்பாலித்தார். இன்று காலை விநாயகருக்கு சிறப்பு அலங் காரம் வழிபாடு நடைபெற்றது.

    • போக்சோ சட்டத்தில் கைது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வயது 17 மாணவி. இவர் செய்யாறு பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மாணவி 5 மாதம் கர்ப்பமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சோனியா வழக்கு பதிவு செய்து வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • ஓ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு, அனக்காவூர் ஒன்றியங்களில் நம்ம ஊரு சூப்பர் இயக்கம் சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாமை நேற்று முன் தினம் ஓஜோதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

    செய்யாறு ஒன்றியம், வேளியநல்லூர் கிராமத்தில் நம்ம ஊரு சூப்பர் தூய்மை பணிக்கான விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சேர்மன் நாவல்பாக்கம் பாபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பத்மப்ரியா வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக ஓஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து கிராமம் முழுவதும் பிளாஸ்டிக்கை ஒழித்து சுகாதாரத்தை மேம்படுத்த வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பின்னர் பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரத் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    பின்னர் அனக்காவூர் ஒன்றிய அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஒ.ஜோதி எம்எல்ஏ தொடங்கி வைத்து சைக்கிளில் ஊர்வலமாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 32 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    சென்னையில் இருந்து வந்தவாசி வழியாக அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. வேலூரில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கீழ் கொடுங்காலூர் கிராமம் அருகே 2 அரசு பஸ்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்களில் பயணம் செய்த சுமார் 32க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த வர்களுக்கு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கீழ் கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பட்டியந்தல் கிராமத்தில் மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்
    • தாசில்தார் சமரசம்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட பட்டியந்தல் கிராமத்தில் உள்ள ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 30-க்கு மேற்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினர் கடந்த வாரம் அகற்றினர்.

    மேலும் அவர்களுக்கு மாக அருகே உள்ள மட்டவெட்டு கிராமத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

    ஆனால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பட்டியந்தல் கிராமத்தில் அல்லது அருகில் உள்ள வீரளூர் கிராமத்திலோ வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கலசபாக்கம் தாசில்தார் அவர்களிடம் சமரசம் செய்து தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தால்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று கூறினார். அதன் பிறகு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்துவிட்டு சென்றனர்.

    ×