தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகையிட்டு போராட்டம்

பட்டியந்தல் கிராமத்தில் மாற்று இடம் வழங்க வலியுறுத்தல் தாசில்தார் சமரசம்
கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.
கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.
Published on

திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட பட்டியந்தல் கிராமத்தில் உள்ள ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 30-க்கு மேற்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினர் கடந்த வாரம் அகற்றினர்.

மேலும் அவர்களுக்கு மாக அருகே உள்ள மட்டவெட்டு கிராமத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

ஆனால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பட்டியந்தல் கிராமத்தில் அல்லது அருகில் உள்ள வீரளூர் கிராமத்திலோ வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கலசபாக்கம் தாசில்தார் அவர்களிடம் சமரசம் செய்து தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தால்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று கூறினார். அதன் பிறகு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்துவிட்டு சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com