என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க கவச அலங்காரம்"

    • முக்கிய வீதிகளில் பவனி
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சதுர்த்தி திதி தொடங்கியதையொட்டி சம்மந்த விநாயகருக்கு தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக தயார் நிலையில் உள்ளன. பூஜை பொருட்கள் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கான திதி நேற்று மாலை 3.26 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 2.45 மணிக்கு நிறைவடைகிறது.

    அதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை விநாயகர் வழிபாடு தொடங்கியது. அண்ணாமலையார் கோவில் ஆன்மிக மரபுப் படி, சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், சஷ்டி போன் றவற்றின் உற்சவ வழிபாடு இரவில் நடப்பது வழக்கம். திதி அமையும் இரவில், உற்சவம் நடத்தப்படுவது இக்கோவிலில் மட்டுமே நடைபெறும் வழிபாட்டு முறையாகும்.

    அதன்படி, அருணாசலேஸ்வரர் கோவில் 3- ம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயக ருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மேலும், தங்கக்கவச அலங்காரத்தில் எழுந்தருளி விநாயகர் பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து விநாயகரை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மாடவீதியில் பவனி வந்து அருள்பாலித்தார். இன்று காலை விநாயகருக்கு சிறப்பு அலங் காரம் வழிபாடு நடைபெற்றது.

    ×