என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி நின்ற காட்சி.
அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
- 32 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
சென்னையில் இருந்து வந்தவாசி வழியாக அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. வேலூரில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கீழ் கொடுங்காலூர் கிராமம் அருகே 2 அரசு பஸ்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்களில் பயணம் செய்த சுமார் 32க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த வர்களுக்கு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கீழ் கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






