என் மலர்
நீங்கள் தேடியது "£20 jewelery heist"
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளிபட்டு ஊராட்சிக்குட்பட்ட வீட்டுவசதி வாரியம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அதிகாரி சம்பத் சாந்தா தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர்.
சாந்தாவிற்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகச்சைக்காக நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதே போல அதே பகுதியில் உள்ள செந்தில்வேல் குடும்பத்துடன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
தகவலறிந்த வந்த ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணா மலையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகையை சேகரித்தனர். பின்னர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரணியில் ஓரே நேரத்தில் அடுத்தடுத்து வீட்டில் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






