என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Permission to melt Ganesha idols"

    • மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
    • பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள 1150 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    அந்த சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் 200 பயிற்சி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது.

    திருவண்ணாமலையில் நாளை மாலை ஊர்வலம் நடைபெற உள்ளது. காந்தி சிலை அருகே விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் புறப்படுகிறது. அந்த சிலைகள் தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரை குளத்தில் கரைக்கப்பட உள்ளன.

    அதேபோல் வந்தவாசி மற்றும் செய்யாறில் வருகிற 3-ந் தேதியும், ஆரணியில் 4-ந் தேதியும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோணிராயன்குளம், வந்தவாசி 5 கண் வாராபதி, பூமா செட்டிகுளம், போளூர் ஏரி ஆகிய நீர் நிலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வழிகாட்டுதல் படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    ×