என் மலர்
திருவண்ணாமலை
- இரவு 8 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை.
- 2-வது நாளாக தேடும்பணி தீவிரம்
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவன் முருகன் (வயது 45). அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் உமா மகேஸ்வரன் என்பவருடன் அகரம் பள்ளிப்பட்டு வழியாக செல்லக்கூடிய தென்பெண்ணை ஆற்றில் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தென்பெண்ணை ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் முருகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உமா மகேஸ்வரன் கத்தி கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முருகனை ஆற்றில் இறங்கி மீட்க முயன்றனர். அதற்குள் அவர் நீண்ட தூரம் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து தண்டராம்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இரவு 8 மணி வரை தேடியும் முருகன் கிடைக்கவில்லை. இன்று 2 வது நாளாக மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர். அகரம் பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து மணலூர்பேட்டை வரை ஆற்றில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முருகனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நள்ளிரவில் மறியல்
- போக்குவரத்து பாதிப்பு
செங்கம், செப்.3-
செங்கம் அருகே உள்ள மேல்செங்கம் அடுத்த துரிஞ்சாபுரம் பகுதியில் விநாயகர் சிலை விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இதனைத் தொடர்ந்து மேல்செங்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு ஒரு பிரிவினர் புகார் மனு அளித்து வழக்கு பதிவு செய்து உடனடியாக எதிர் தரப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரவு நேரத்தில் வந்த பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
- 13-ம் ஆண்டு திருவிழா நடந்தது
- அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதனுர் கிராமத்தில் ஸ்ரீ படவேட்டம்மன் கோவில் உள்ளது.
இங்கு 13-ம் ஆண்டு பால்குடம் விழா நடைபெற்றது.
பால்குட ஊர்வலத்தில் பெண்கள் விரதமிருந்து மஞ்சள் சேலையில் பங்கேற்றனர். விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்றடைந்தது.
இதில் பல பெண் பக்தர்கள் திடீரென அருள் வந்து ஆடினர். அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டு நேர்த்திகடன்
- உரிமையாளருக்கு அபராதம்
- மாடுகளை கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்
வந்தவாசி:
வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட சன்னதி தெரு அச்சரப்பாக்கம் சாலை பஜார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் அதிகமாக மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த சாலைகளில் அதிகமாக மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் முதியோர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
இது சம்பந்தமாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளை மாடுகள் முட்டி கீழே தள்ளியது. இது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதனை சமூக வலைதளங்கள் மூலம் பரவியதால் வீடியோ வைரலானது.
இது சம்பந்தமாக நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் உத்தரவின் படி நகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார். பின்னர் மாடுகளை கோசாலைக்கு அனுப்பி வைத்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
- வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
- 100 சதவீதம் வங்கிக்கடன்கள் வழங்க நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்க ளுடான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:- அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு வங்கி சிறப்பான முறையிலும், துரிதமான முறையிலும் கடனுதவிகளை வழங்க முன்வர வேண்டும்.
அதேபோல் அனைத்து துறைகளுக்கும் வங்கிக்கடன்கள் தகுதியின் அடிப்படையில் பயனாளிகளுக்கு 100 சதவீதம் வங்கிக்கடன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு தமிழகத்திலேயே உணவு பொருட்கள் பதப்படுத்துவதில் திருவண்ணாமலை மாவட்டம் தான் அதிக வங்கிக்கடன்களை வழங்கி முதலிடத்தில் உள்ளது.
மேலும் தாட்கோ கடன், மகளிர் கடன், பட்டுப்புழு வளர்ப்பு கடன், கைத்தறிக்கடன், வேளாண்மை விற்பனைத்துறை, வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் கிசான் அட்டை, மாவட்ட தொழில் மையத்தில் செயல்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் மானிய திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜெயம், மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) சோமசுந்தரம், மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன் உள்பட பல்வேறு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஒன்றியம் கடலாடி ஊராட்சி பருவதமலை அடிவாரத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர், காளியம்மன், அம்மச்சார் அம்மன், ராமர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும், போளூர் சட்டமன்ற உறுப்பினரான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- கர்ப்பமாக்கிய சிறுவன் கைது
- ேபாலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 -ம்வகுப்பு படித்து வருகிறார். மேலும், சிறுமிக்கு நேற்று முன்தினம் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவ மனையில் சிறுமிக்கு திடீரென பெண் குழந்தை பிறந்துள்ளது.
மேலும் திருமணம் ஆகாமல் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததை கண்டு டாக்டர்கள் அதிர்ச் சியடைந்தனர். உடனே ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிறுமியின் தாய் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர் . விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த சிறுமியின் எதிர் வீட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் தான் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
அந்த சிறுவனின் தங்கையும், பாதிக்கப்பட்ட சிறுமியும் ஒரே பள்ளியில் படித்து வருவதால், சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுவனும் , சிறுமியும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானது தெரியவந்துள்ளது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், எஸ்ஐ மகாராணி மற்றும் போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை பலாத்காரம் செய்து கார்ப்ப மாக்கியது தெரியவந்தது. உடனே, சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து , திருவண்ணாமலை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சீர்திருத்த பள்ளி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி
- பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
வந்தவாசி:
வந்தவாசி- விளாங்காடு சாலையில் உள்ள ஆரியாத்தூரிலிருந்து கோயில்குப்பம் கிராமத்துக்குச் செல்லும் சுமார் ஒன்றரை கி.மீ. தூர தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
மழையின் காரணமாக சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த தார்ச் சாலை போடப்பட்டது. போட்ட சில மாதங்களிலேயே இந்த சாலை சேதமடைய தொடங்கியது. காலப்போக்கில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே பயனற்ற நிலையில் சேதமடைந்து விட்டது.
மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதால், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பைக்குகளில் செல்வோர் சேற்றில் சிக்கி விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே புதிய சாலை அமைக்கக் கோரி சேற்றில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் இஞ்சிமேடு, வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாத சுவாதி நட்சத்திரம் மகாயாகம் நடந்தது.
காலையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, தாயார், லட்சுமி நரசிம்ம பெருமாள், சக்கரத்தாழ்வார், சீதாராமன், அனுமான், ஆகிய சாமிகளுக்கு பல்வேறு அபிஷேகம் செய்து திருமஞ்சனம் செய்து வைத்தனர்.
பின்னர் யாகசாலையில் பல்வேறு வண்ண அரிசிகள் மூலம் சுவாதி நட்சத்திர மகா கோலம் வரைந்து, பல்வேறு மூலிகைகள், நெய், நவதானியம், பழங்கள், ஆகியவை மூலம் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது.இதில் சுற்றுப்புற நகரங்கள், கிராமங்களில், இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதர்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகி பாலாஜி, பட்டர் செய்திருந்தார்.
- 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, போளூர், சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு சேத்துப்பட்டு வட்ட செயலாளர் ஜான்சன், தலைமை தாங்கினார் வட்டத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுராமன், ஆகிய முன்னிலை வகித்தனர்.
கடந்த 24-ந்தேதி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேத்துப்பட்டு, தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
மேலும் 7 அம்ச கோரிக்கைகளை எந்த முடிவும் எடுக்காததை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் தாலுக்கா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பின்னர் சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 10 நாட்களுக்குள் உங்களுக்கு வழங்க வேண்டிய ஜமாபந்தி நிலுவை தொகையை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
பின்னர் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலந்து சென்றனர் இதில் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
- மிருகண்டா அணை நிறம்பியது
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஒன்றியம் ஜவ்வாது மலை பகுதியில் பெய்த தொடர் மழையால் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கலசப்பாக்கம் பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஏரி, குளங்கள் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தால் கலசபாக்கம் அடுத்த நவாப்பாளையம் அண்ணா நகர் கொல்லக்கொட்டை சேர்ந்த அப்பாசாமி என்பவரின் விவசாய கிணறு கட்டிடம் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது.
மேலும் பல்வேறு விவசாய கிணறுகளின் கட்டிடங்கள் மழையால் இடிந்து சரிந்து விழுந்து உள்ளன.
இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். கிணற்றை சீரமைக்க நிவாரண உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- கையில் உள்ள பொருட்களை கொண்டு மீட்பது குறித்து விளக்கம்
- ஏராளமானோர் பங்கேற்பு
ஆரணி:
தற்போது பருவ மழை தொடங்கி விட்டதால் பல இடங்களில் கனமழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.
இதில் பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாக்க வேண்டும் என்று செயல் விளக்கம் ஆரணி அருகே உள்ள காமக்கூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் செயல் விளக்கம் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சப்-கலெக்டர் தனலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.
இதில் ஆரணி தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்டிக் காலிடப்பாக்களை கொண்டும் நீர்நிலைப் பகுதியில் தத்தளிப்பவர்களை எப்படி மீட்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினார்கள்.
கையில் உள்ள பொருட்களை கொண்டு மீட்பது குறித்தும் செயல் தத்ரூபமாக தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் குப்பு சங்கர், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி கோபு, இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் பாபு, தாசில்தார் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






