என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறியலால் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
செங்கம் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே கோஷ்டி ேமாதல்
- நள்ளிரவில் மறியல்
- போக்குவரத்து பாதிப்பு
செங்கம், செப்.3-
செங்கம் அருகே உள்ள மேல்செங்கம் அடுத்த துரிஞ்சாபுரம் பகுதியில் விநாயகர் சிலை விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இதனைத் தொடர்ந்து மேல்செங்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு ஒரு பிரிவினர் புகார் மனு அளித்து வழக்கு பதிவு செய்து உடனடியாக எதிர் தரப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரவு நேரத்தில் வந்த பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
Next Story






