search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    தென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

    • சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு
    • கடந்த 3 வாரங்களாக நீர்வரத்து அதிகரிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணைக்கு கடந்த 3 வாரங்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டது. இதனால், சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதனால் தென் பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாத்தனூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. 119 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் 117 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.

    அணையில் இருந்து கடந்த 26-ம் தேதி விநாடிக்கு 2,800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் (27-ந் தேதி) மாலை விநாடிக்கு 4,250 கனஅடி வெளி யேற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,464 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளி யேற்றப்படுகிறது.

    அணையில் 6,875 மில்லியன் கனஅடி தண்ணீர்இருப்பு உள்ளது. அணை பகுதியில் 12.2 மி.மீ., மழை பெய்துள்ளது. தென்பெண்ணையாற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 57 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 644.30 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 92 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 156 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் செய்யாற்றில் வெளி யேற்றப்படுகிறது.

    62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையில் நீர்மட்டம் 49.40 அடியாக உள்ளது.

    Next Story
    ×