என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    அரசு பள்ளியில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆய்வு

    • சத்துணவை ருசித்து பார்த்தார்
    • மேற்கூரை சேதமடைந்ததை சரி சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் போளுர் சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் தேவிமங்கலம் ஊராட்சி பரிக்கல்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும், போளூர் எம்.எல்.ஏ. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது பள்ளியின் மேல்கூரைகள் சேதமடைந்ததை சரி சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மையத்துக்கு சென்று பார்வையிட்டு சாப்பாட்டை ருசித்து பார்த்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×