என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
    • பொன்னேரி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பொன்னேரி:

    மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகள், பள்ளிகள், அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டதை கண்டித்து பொன்னேரி போதகர்கள் ஐக்கிய நல சங்கம் அனைத்திந்திய கிறிஸ்தவர்கள் சபை கூட்டமைப்பு சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதை கண்டித்தும், மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும், 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் முழங்காலில் நின்றபடி பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் பிஷப் பாஸ்டர் ஞான்ராஜ், ஏஐசிசிசி தலைவர் பிஷப் பாஸ்டர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் பாஸ்டர்கள் ஜெயா, ஜான்ராஜ், அமுல்ராஜ், சிவா செல்வராஜ், ஜான் பாபு, லாசர் சலோமி டேனியல், ஜான்சன் போதகர்கள், விக்டர் டேனியல், தாமஸ், ஏசாயா, பிஷப்கள் ஜெரால்டு, டைடன், நாதன் மோசஸ், பால் ஞானம், பக்தர் சுந்தர் சிங் மற்றும் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    • காரில் இருந்த அனிதாவை கீழே இறக்கிவிட்டு விட்டு உமேஷ் குமாரை காரில் கடத்திச் சென்றனர்.
    • அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    திருவள்ளூர் அடுத்த ஸ்ரீதேவி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் தாஸ் (27), இவரது மனைவி அனிதா (23) இவர் நேற்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு மனைவியுடன் சென்று இருந்தார்.

    இன்று காலை பெசன்ட் நகரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊரான ஸ்ரீதேவி குப்பத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, புதுச்சத்திரம் அருகே வரும்போது பின்னால் தொடர்ந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் தன் மீது மோதி விட்டதாக கூறி வழிமறித்தனர்.

    காரில் இருந்த அனிதாவை கீழே இறக்கிவிட்டு விட்டு உமேஷ் குமாரை காரில் கடத்திச் சென்றனர்.

    இதுகுறித்து அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர், இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது ஆகும்.
    • ஆடி மாதம் இன்று பிறப்பையொட்டி அமாவாசையும் சேர்ந்து வந்துள்ளது.

    திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் அமாவாசை தினங்க ளில் தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது ஆகும்.

    இந்த நிலையில் ஆடி மாதம் இன்று பிறப்பையொட்டி அமாவாசையும் சேர்ந்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூரில் குவிந்தனர். அவர்கள் இரவு கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் கோவில் அருகே உள்ள குளக்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் மூலவர் வீரராகவரை வழிப்பட நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் காக்களூர் ஏரிக்கரை யிலும் திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்து இருந்தனர்.

    கோவிலுக்குள் செல்ல அதிக அளவு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பெரும்பாலானவர் கோவில் நுழைவு வாயிலில் அருகேயே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்று வழிபட்டு சென்றனர்.

    இன்று காலை பக்தர்களின் வருகை திடீரென அதிகரித்ததால் ஜெ.என்.சாலை, ராஜாஜி சாலை, தேரடி, மோதிலால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வாகன சோதனையில் அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் குமணன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த நந்தகுமார் (24), சரண் (22), வசந்த் (22) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அப்புன் இவர் நண்பர்களுடன் மதுகுடித்த போது தகராறு ஏற்பட்டது.
    • பெரியகாவனத்தை சேர்ந்த நண்பரான ஜெயக்குமாரை கைது செய்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளத்தில் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அப்புன் இவர் நண்பர்களுடன் மதுகுடித்த போது தகராறு ஏற்பட்டது.

    இந்த மோதலில் அப்புனுவுக்கு வெட்டு விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியகாவனத்தை சேர்ந்த நண்பரான ஜெயக்குமாரை கைது செய்தனர்.

    • பலத்த காயம் அடைந்த வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • விபத்து குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் மணி. இவரது மகன்கள் நரசிம்மன்(38), வெங்கடாசலபதி (33). இவர்களது மைத்துனர் ராஜேந்திரன்(37). அனைவரும் பெயிண்டராக வேலைபார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் வெங்கடா சலபதி உள்பட 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்க சென்றனர். அப்போது வேப்பம்பட்டு பகுதியில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வெங்கத்தூர் நோக்கி வந்தது. அப்போது சரக்கு வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அண்ணன் நரசிம்மன், மைத்துனர் ராஜேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீஸ இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்த ராஜேந்திரனை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும், நரசிம்மனை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்ச்செல்வி அடிக்கடி தலைவலியால் துடிதுடித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது தேர்வாய் கண்டிகை கிராமம். இங்கு வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் பழனி என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (வயது 39). இவர்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    தமிழ்ச்செல்வியின் மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இருப்பினும் தமிழ்ச்செல்வி அடிக்கடி தலைவலியால் துடிதுடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தொடர் தலைவலியால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக கடந்த 15-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து அவர் குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலைமேல் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் அமைந்துள்ளது. விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கிருத்திகை நாட்களில் வரும் பக்தர்களாலும் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் வெளிமாநிலம், மாவட்டத்தை சேர்ந்த பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    • ஹாரன் ஒலித்தும் எந்த அசைவும் இல்லாமல் போதையில் படுத்து கிடந்தார்.
    • அங்கிருந்து செல்ல மறுத்து அடம் பிடித்த போதை வாலிபர் போலீசார் கால்களை பிடித்து போதை மயக்கத்தில் உளறினார்.

    திருவள்ளூர்:

    திருத்தணி பஸ் நிலையம் அருகில் உள்ள அரக்கோணம் சாலை எப்போதும் வாகன போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படும்.

    காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மதுபோதை தலைக்கேறிய நிலையில் தட்டுத்தடுமாறி வாலிபர் ஒருவர் அரக்கோணம் சாலையில் நடந்து வந்தார். திடீரென அவர் நடுரோட்டிலேயே படுத்து தூங்க தொடங்கினார்.

    இதனால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஹாரன் ஒலித்தும் எந்த அசைவும் இல்லாமல் போதையில் படுத்து கிடந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வாகன ஓட்டிக ளும், அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்குள் வாகனங்கள் செல்ல முடியாததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து சாலையில் படுத்து கிடந்த வாலிபரை கண்டித்து அங்கிருந்த செல்லுமாறு அறிவுரை கூறினர்.

    ஆனால் போதை ஆசாமி அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் போலீசாரி டம் வாக்குவாதம் செய்தார். தரை மிகவும் சூடாக இருக்கிறது. படுக்க பெட் எடுத்து வாருங்கள் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர் தரையில் படுப்பதிலேயே குறியாக இருந்தார்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்து அடம் பிடித்த போதை வாலிபர் போலீசார் கால்களை பிடித்து போதை மயக்கத்தில் உளறினார். இதற்குள் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் போதை வாலிபரின் அட்ட காசத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

    நேரம் செல்ல செல்ல கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போதை வாலிபரின் கை, கால்களை பிடித்து குண்டுகட்டாக அங்கிருந்து அகற்றி அருகில் உள்ள போலீஸ் பூத்தின் பக்கத்தில் அமர வைத்தனர். அப்போதும் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் அவர் உளறிக் கொண்டிருந்தார்.

    போதை நபரை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சீரானது. பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த போதை வாலிபர் அங்கிருந்து சென்றார். சுமார் ஒரு மணிநேரம் போதை நபர் போலீசாரை திணறடித்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • வினாடி வினா நிகழ்ச்சியை ஆரணி பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார்.
    • முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர்பாபு வரவேற்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பொன்னேரியில் இயங்கி வரும் தமிழாலயா இலக்கிய அமைப்பின் சார்பில் மாணவிகளுக்கான வினாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், பங்கேற்ற மாணவிகளுக்கும் சான்றிதழ்கள்,நினைவு பரிசு, பதக்கம் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இ.காவேரி தலைமை தாங்கினார். தமிழாலயா அமைப்பின் நிறுவனரும், அமைப்பாளருமான பொன்.தாமோதரன் முன்னிலை வகித்தார்.வினாடி வினா நிகழ்ச்சியை ஆரணி பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து நினைவு பரிசு, சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழாலயா நிர்வாகிகள் கவிஞர்கள் சிவலிங்கம், தனுஷ்கோடி, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர்பாபு வரவேற்றார்.

    முடிவில், உதவி தலைமை ஆசிரியர் தர்மலட்சுமி நன்றி கூறினார்.

    • சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • வெங்கடேசன் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.

    திருவொற்றியூர் வடக்கு மாட வீதி, செட்டி தெருவில் வசித்து வருபவர். நிர்மலா. இந்த வீட்டின் பாழடைந்த பால்கனி திடீரென இடிந்து அருகில் உள்ள வெங்கடேசன் என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.

    அப்போது அருகில் விளையாடிக் காொண்டு இருந்த நிர்மலாவின் 3 வயது பேரன் நவீன் கிஷோரின் தலையில் கட்டிடத்தின் கல் பட்டது. இதில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கடேசன் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.

    • வீட்டில் இருந்த மிக்சியை குப்பன் பழுது பார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கி குப்பன் பலியானார்.
    • பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம் அருகே உள்ள பனையஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன்(வயது23). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு நர்மதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தற்போது நர்மதா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்தநிலையில் வீட்டில் இருந்த மிக்சியை குப்பன் பழுது பார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கி குப்பன் பலியானார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×