என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • குழந்தையின்மையை போக்குவதாக 4 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார்
    • ஆவடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த ஆவடியில் இயங்கும் பிரபல செயற்கை கருத்தரிப்பு மையத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். குழந்தையின்மையை போக்குவதாக 4 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு, தற்போது தங்களுக்கு குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லை என மருத்துவர்கள் அலட்சியமாக பேசுவதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். இது குறித்து ஆவடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி கடந்த 1-ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.
    • பஸ்சில் பயணம் செய்த பெரியகுப்பம் கற்குழாய் சாலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான ஸ்டீபன் என்பவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி மணவாளநகரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 1-ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த பெரியகுப்பம் கற்குழாய் சாலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான ஸ்டீபன் (வயது 51) என்பவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் 3 பேர் ஆட்டோவில் வந்து பஸ்சை வழிமறித்து ஸ்டீபனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஸ்டீபன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஸ்டீபன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்குபதிவு செய்து மாணவியின் தந்தை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரோகினி வசந்தி கணவர் கார்த்திகேயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
    • திருவள்ளூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்றபோது மாதம் தோறும் ரோகினி வசந்திக்கு அவரது கணவர் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரோகினி வசந்தி (வயது 40). திருவள்ளூர் ராஜாஜி புரத்தில் தையல் கடை வைத்து உள்ளார்.

    இவர் கணவர் கார்த்திகேயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    திருவள்ளூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்றபோது மாதம் தோறும் ரோகினி வசந்திக்கு அவரது கணவர் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து கார்த்திகேயன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளார்.

    இதன் காரணமாக கார்த்திகேயன் குடும்பத்தினர் மற்றும் ரோகினி வசந்தி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ரோகிணி வசந்தி தனது தையல் கடையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் கடைக்குள் புகுந்து ரோகிணி வசந்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரோகிணி வசந்தியை சரமாரியாக வெட்டினர்.

    இதனை தடுக்க முயன்ற கடை ஊழியர் பாபு என்பவரையும் அவர்கள் மிரட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த ரோகிணி வசந்தி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே லாரியை நிறுத்தி கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • லாரியுடன் 8 டன் கிராவலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பரத் குமார். லாரி டிரைவர். இவர் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தார்.

    பொன்னேரி அடுத்த இலவம்பேடு அருகே வந்த போது சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு அங்குள்ள கடையில் பரத்குமார் சாப்பிட்டார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென லாரி டிரைவர் பரத் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொன்னேரி பஜாரில் தன்னை இடித்து விட்டு வந்ததாக கூறி டிரைவர் பரத்குமாரின் பாக்கெட்டில் இருந்த ரூ.500, செல்போன், ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை பறித்து விட்டு மிரட்டி தப்பி சென்று விட்டார். இதுகுறித்து பரத்குமார் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரியை சேர்ந்த மூர்த்தி (36) என்பவரை கைது செய்தனர்.

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே லாரியை நிறுத்தி கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். உடனே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லாரியில் ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி கிராவல் கடத்தி வரப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரியுடன் 8 டன் கிராவலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏ.டி.எம். மையத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியே வந்தது.
    • தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரம் தீயில் சிக்காமல் அதில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயல் அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று காலை 5 மணியளவில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியே வந்தது.

    சிறிது நேரத்தில தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கட்டிடத்தின் உரிமையாளர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயல் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர்.

    ஆவடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரம் தீயில் சிக்காமல் அதில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது. உயர்மின் அழுத்தம் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கும்பாபிஷே நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.
    • கோவிலை சுற்றி உள்ள 100 கடைகள் தற்காலிகமாக அகற்ற உத்தரவு.

    பொன்னேரி :

    பொன்னேரி அருகே சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் வருகிற 21-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை, வாகன நிறுத்தும் வசதி, பக்தர்கள் தங்குவதற்கான இடம் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பூ மாலை, தேங்காய், பழம், காய்கறிகள் கடைகள் உள்ளன. இதனால் கும்பாபிஷேம் நடைபெறும் நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.

    இதையடுத்து கோவிலில் இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் கோவிலை சுற்றி உள்ள கடைகளை தற்காலிகமாக அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று வியாபாரிகளுக்கு வருவாய் துறையினர் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறுவாபுரி கோவில் வியாபாரிகள், கிராம மக்கள், கோவில் நிர்வாகத்தினர் ஆகியோருடன் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ரஜினிகாந்த், செயல் அலுவலர் செந்தில் குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா முடியும் வரை கோவிலை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளை தாமாக அகற்றி விடுவதாகவும், கும்பாபிஷேகத்திற்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

    மேலும் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஒன்றியத்தில் உள்ள ஊராட்சித் தலைவர்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஒன்றியத்தில் உள்ள ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் ரூபேஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள் கோளூர் குமார், மெதுர் சீனிவாசன், பவானி கங்கை அமரன், ஞானவேல், சம்பத், வனிதாஸ்ரீ ராஜேஷ், மங்கை உமாபதி, சசிகுமார், பாக்கியலட்சுமி, இலக்கியா கண்ணதாசன், மாலதி சரவணன் மஞ்சுளா பஞ்சாட்சரம், துணைத் தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல், ஊராட்சி செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூவம் ஆறு மாசுபட்டு, நிலத்தடி நீர் மாசுபடும் நிலை உள்ளது.
    • கூவம் ஆற்றில் கழிவு நீரை கொட்டக்கூடாது என்று நகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தி உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட கூவம் ஆற்றில் திருவள்ளூர் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.

    இதன் காரணமாக கூவம் ஆறு மாசுபட்டு, நிலத்தடி நீர் மாசுபடும் நிலை உள்ளது. கூவம் ஆற்றில் கழிவு நீரை கொட்டக்கூடாது என்று நகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் இது நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கூவம் ஆற்றில் கழிவு நீரை கொண்டு வந்து கொட்டிய 4 லாரிகளை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்த ராஜுலு, சுகாதார ஆய்வாளர் சுதர்சன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து கூவம் ஆற்றில் கழிவு நீர் கொட்டிய 4 லாரிகளையும் பறிமுதல் செய்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.

    • ஊத்துக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை நிறுத்தி விட்டு கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.
    • நாராயணசாமியின் பாக்கெட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடுபோனது.

    ஊத்துக்கோட்டை:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஓபசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. அரிசி வியாபாரி. இவர் ஊத்துக்கோட்டையில் இருந்த கும்மிடிப்பூண்டி செல்லும் பஸ்சில் சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஊத்துக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை நிறுத்தி விட்டு கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது நாராயணசாமியின் பாக்கெட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடுபோனது.

    இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் சுற்றிய அரக்கோணம் தாலுகா எம். என். கண்டிகை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் விசாரித்தபோது அவர், பஸ்சில் இருந்த அரிசி வியாபாரி நாராயணசாமியிடம் ரூ.20 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலையை போலீசார் கைது செய்து ரூ. 20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    • மணலி புதுநகர் பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டு இருந்தன.
    • வீடுகள் முழுவதும் ஒரு வாரத்திற்குள் படிப்படியாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    மணலி புதுநகர் பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரின் உத்தரவுப்படி ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 226 வீடுகள்,43 கடைகள் , 8 கட்சி அலுவலகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அப்பகுதியில் வசித்து வருபவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவொற்றியூர் பஞ்செட்டி- பொன்னேரி நெடுஞ்சாலை முதல் மகாலட்சுமி நகர் வரை கால்வாயை ஆக்கிரமித்து இருந்த கட்டிடங்களை அகற்ற நகராட்சி மண்டல அலுவலர் கோவிந்தராசு தலைமையில், அதிகாரிகள் வந்தனர். 5 ஜே. சி .பி. எந்திரங்கள், ஒரு பளு தூக்கும் எந்திரம்,8 லாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

    மொத்தம் 43 கடைகள்,8 கட்சி அலுவலகங்கள் முழுவதும் முதலில் அகற்றப்பட்டன. வீடுகள் முழுவதும் ஒரு வாரத்திற்குள் படிப்படியாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அப்போது செயற்பொறியாளர் காமராஜ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் நக்கீரன், உதவி பொறியாளர் சோமசுந்தர்ராஜ் உடன் இருந்தனர். மணலிபுதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடி ராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்றது.
    • சிறிய தரைப்பாலம் கடந்த 2 வாரத்துக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் தட பெரும்பாக்கம் ஊராட்சி திருவேங்கடபுரத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்றது.

    அப்பகுதியில் கழிவு நீர் கால்வாயை இணைக்கும் வகையில் சிறிய தரைப்பாலம் கடந்த 2 வாரத்துக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சிறிய தரைப்பாலத்தில் இருந்த சிமெண்ட்டு பூச்சு உடைந்து ஓட்டை விழுந்தது. கட்டி முடிக்கப்பட்டு 2 வாரத்திலேயே இடிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கட்டுமான பொருட்கள் தரமானதாக இல்லை எனவும், கனரக வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் கட்டப்பட வில்லை எனவும் குற்றம் சாட்டி கிராமமக்கள் அங்கு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் பணி ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இரவோடு இரவாக உடைந்த பகுதியை சீரமைத்தனர்.

    • குஞ்சலம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.30 கோடி செலவில் துணைமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
    • திருட்டு நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள குஞ்சலம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.30 கோடி செலவில் துணைமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்குவதற்காக மின்சாதன பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

    இதில் 2 டன் எடையுள்ள ரூ.40 லட்சம் மதிப்புள்ள பித்தளை கம்பிகள் மாயமாகி இருந்தது. அதை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மின்சார வாரிய பொறியாளர் கிருஷ்ணகுமார் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஊத்துக்கோட்டை, அண்ணா நகரில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக சென்ற மினி லாரியில் 2 டன் எடையுள்ள பித்தளை கம்பிகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக திருத்தணியை பஜார் தெருவைச் சேர்ந்த பெரியசாமி, ரத்னசாமி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    ×