என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டையில் அரிசி வியாபாரியிடம் ரூ.20 ஆயிரம் திருடியவர் கைது
- ஊத்துக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை நிறுத்தி விட்டு கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.
- நாராயணசாமியின் பாக்கெட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடுபோனது.
ஊத்துக்கோட்டை:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஓபசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. அரிசி வியாபாரி. இவர் ஊத்துக்கோட்டையில் இருந்த கும்மிடிப்பூண்டி செல்லும் பஸ்சில் சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஊத்துக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை நிறுத்தி விட்டு கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது நாராயணசாமியின் பாக்கெட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடுபோனது.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் சுற்றிய அரக்கோணம் தாலுகா எம். என். கண்டிகை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் விசாரித்தபோது அவர், பஸ்சில் இருந்த அரிசி வியாபாரி நாராயணசாமியிடம் ரூ.20 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலையை போலீசார் கைது செய்து ரூ. 20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






