என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • குழிநாவல் - சுண்ணாம்புக்களும் செல்லும் சாலையில் குழிநாவல் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடங்களுடன் அண்ணாமலைச்சேரி - சென்னை செல்லும் அரசு பேருந்தை மடக்கி சாலை மறியல் ஈடுபட்டனர்.
    • ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் வட்டாட்சியர் கண்ணன் அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி சார்பாக இங்கு உள்ள கிராமப்புற மக்கள் குழிநாவல், ஓபசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் ஓபசமுத்திரம் ஊராட்சி குழிநாவல் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கிராமத்தின் சார்பாக புகார்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று குழிநாவல் - சுண்ணாம்புக்களும் செல்லும் சாலையில் குழிநாவல் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடங்களுடன் அண்ணாமலைச்சேரி - சென்னை செல்லும் அரசு பேருந்தை மடக்கி சாலை மறியல் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் வட்டாட்சியர் கண்ணன் அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் எங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வருவதில்லை, தெரு விளக்கு போடுவதில்லை என குற்றம் சாட்டினர். இது சம்பந்தமாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் வட்டாட்சியர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    • மந்தவெளியம்மன் உள்ளிட்ட 7 சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.
    • சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள மந்தவெளியம்மன் கோவிலில் 10-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதற்கான விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. காலை, மாலை இருவேளையும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு அம்மன் கரகம் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நடைபெற்றது.

    பேரம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

    மந்தவெளியம்மன் உள்ளிட்ட 7 சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பெரிய ராட்சத கிரேன் மூலம் உடலில் அலகு குத்திக் கொண்ட பக்தர்கள் அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தும், கற்பூர தீபாராதனை காண்பித்தும் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அதை தொடர்ந்து வண்ண வண்ண மலர்களாலும், வண்ண வண்ண மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

    • கிராமங்களில் சமூக காடுகள், முருங்கை வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள், குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமூக காடுகள் வளர்ப்பு நாற்றங்கால் வளர்ப்பு, செடி மற்றும் மரங்கள் வளர்ப்பு, குறித்து பயிற்சி முகாம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிராமங்களில் சமூக காடுகள், முருங்கை வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள், குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. பின்னர் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயிலில் நர்சரி கார்டனின் களப்பணிக்காக சென்று பார்வையிட்டனர். முகாமில் வனத்துறை அலுவலர் ஞானப்பன் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மற்றும் கும்மிடிப்பூண்டி எல்லாபுரம் மீஞ்சூர் ஒன்றிய மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டன.
    • வீடுகளை இடித்ததால் எங்கு செல்வது என்று தெரியவில்லை.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டன. தொழுதாவூர் ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு எதிரே வெள்ளை குட்டை உள்ளது. இந்த வெள்ளை குட்டையின் அருகே உள்ள இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த 7 பேர் ஆக்கிரமித்து 8 வீடுகள் ஒரு கடை உட்பட 9 கட்டிடங்களை கட்டி உள்ளனர்.

    இதையடுத்து திருத்தணி ஆர்.டி.ஓ. அசரத்பேகம், தாசில்தார் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் 3 ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர். அப்போது குடியிருந்த மக்கள் வீடுகளை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். எங்களால் குட்டைக்கு எந்த பாதிப்பும் இல்லை. திடீரென வீடுகளை இடித்ததால் எங்கு செல்வது என்று தெரியவில்லை. மாற்று இடம் இல்லாததால் குழந்தைகளுடன் நடுதெருவில் நிற்கிறோம். அரசு எங்கள் மீது கருணை காட்ட வேண்டும்.

    எங்களுக்கு நிலம் ஒதுக்கி வீடுகட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கதறி அழுதனர். இந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • புல்லரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், சரவணன் மற்றும் போலீசார் தலக்காஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • போலீசார் வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா போதை பொருள் இருந்தது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், சரவணன் மற்றும் போலீசார் தலக்காஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற நபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா போதை பொருள் இருந்தது தெரியவந்தது.

    அதை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபர் திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரியை சேர்ந்த வேலு (19) என தெரியவந்தது.

    • பஞ்செட்டி ஊராட்சியில் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது.
    • நீர்நிலையை ஆக்கிரமித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே பஞ்செட்டி ஊராட்சியில் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதி நீர்நிலை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவுபடி பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் முன்னிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர்.

    அவர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் நீர் வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த தனியார் பள்ளி கட்டிடத்தின் சுவரை இடித்து அகற்றினர்.

    மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று தெரிகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீர்நிலையை ஆக்கிரமித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் அருகே வேனை ஓட்டிவந்தபோது 6 பேர் கும்பல் அவரை வழிமறித்து பணம் கட்டாதது தொடர்பாக தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.
    • அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்து 500-யை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கள்ளம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன். டிரைவர். இவர் சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம் தவணை முறையில் பணம் செலுத்தி வேன் வாங்கி ஓட்டி வந்தார். இதற்கான பணத்தை அவர் சரிவர கட்டவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் அருகே வேனை ஓட்டிவந்தபோது 6 பேர் கும்பல் அவரை வழிமறித்து பணம் கட்டாதது தொடர்பாக தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.

    மேலும் அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்து 500-யை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம் ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த பொன்னேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரை கைது செய்தனர். அருகில் உள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • குண்டும் குழியுமான சாலையில் வாகனங்களில் செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
    • லையை சீரமைக்ககோரி அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கட மஞ்சேரி சாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் வேலூர் ஊராட்சிக்குட்பட்ட கடமஞ்சேரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இப்பகுதியில் உள்ள சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது. இதனால் சாலைகள் பெயர்ந்து, மேடு பள்ளங்களுடன் போக்கு வரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    சேதம் அடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    குண்டும் குழியுமான சாலையில் வாகனங்களில் செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்தநிலையில் சாலையை சீரமைக்ககோரி அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கட மஞ்சேரி சாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஊராட்சி தலைவர் சசிகுமார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்.
    • சவரணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 6 மாதமாக தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.

    இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் புலனாய்வு துறை வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் சரவணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சென்னை மண்டல போலீஸ் சூப்பிரண்ட் கீதா திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து சவரணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    • திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்கள் உள்ள பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்து உள்ளார்.

    திருத்தணி:

    திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்கள் உள்ள பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருத்தணி நகரம், அகூர், லட்சுமாபுரம், பொன்பாடி, சின்னகடம்பூர், மத்துார், பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்தூர், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரி பேட்டை, கர்லம்பாக்கம், பெருமாநல்லுார், நொச்சிலி, கோணச முத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், கொளத்துார், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, சொராக்காய் பேட்டை, காக்களூர், பாண்டரவேடு, மேலப்பூடி, அம்மனேரி, கொண்டாபுரம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்துார், கிருஷ்ணாகுப்பம், அம்மையார்குப்பம் தெற்கு, கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஆர்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்து உள்ளார்.

    • மனைவியை சேர்த்து வைக்ககோரி செந்தில் குமார் இன்று காலை 5 மணியளவில் திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
    • தகவல் அறிந்ததும் விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் செந்தில்குமாரிடம் செல்போன் மூலம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது39). கொத்தனார். இவரது மனைவி வடிவுக்கரசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த மாதம் வடிவுக்கரசி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பலமுறை மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் வராததால் செந்தில் குமார் மிகவும் மனவேதனையில் இருந்தார்.

    அவர் ஏற்கனவே பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்குமாறு எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து இருந்தார்.

    இந்தநிலையில் மனைவியை சேர்த்து வைக்ககோரி செந்தில் குமார் இன்று காலை 5 மணியளவில் திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும் இதுபற்றி போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் செல்போன் மூலம் பேசினார்.

    தகவல் அறிந்ததும் விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் செந்தில்குமாரிடம் செல்போன் மூலம் பேச்சு வார்த்தை நடத்தினர். மனைவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர் மனைவி வடிவுக்கரசியை அழைத்து வந்தால் தான் கீழே இறங்குவேன் என்று கூறி கீழே இறங்க மறுத்து விட்டார்.

    இதனையடுத்து மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கத்தில் இருந்து வடிவுக்கரசியை போலீசார் அழைத்து வந்தனர். சுமார் 3 மணி நேர போராட்டதுக்கு பின்னர் காலை 8 மணி அளவில் மனைவியை பார்த்த மகிழ்ச்சியில் செந்தில்குமார் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    ×