search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை-வீடுகள் இடிப்பு
    X

    திருத்தணி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்த காட்சி


    திருத்தணி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை-வீடுகள் இடிப்பு

    • திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டன.
    • வீடுகளை இடித்ததால் எங்கு செல்வது என்று தெரியவில்லை.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டன. தொழுதாவூர் ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு எதிரே வெள்ளை குட்டை உள்ளது. இந்த வெள்ளை குட்டையின் அருகே உள்ள இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த 7 பேர் ஆக்கிரமித்து 8 வீடுகள் ஒரு கடை உட்பட 9 கட்டிடங்களை கட்டி உள்ளனர்.

    இதையடுத்து திருத்தணி ஆர்.டி.ஓ. அசரத்பேகம், தாசில்தார் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் 3 ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர். அப்போது குடியிருந்த மக்கள் வீடுகளை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். எங்களால் குட்டைக்கு எந்த பாதிப்பும் இல்லை. திடீரென வீடுகளை இடித்ததால் எங்கு செல்வது என்று தெரியவில்லை. மாற்று இடம் இல்லாததால் குழந்தைகளுடன் நடுதெருவில் நிற்கிறோம். அரசு எங்கள் மீது கருணை காட்ட வேண்டும்.

    எங்களுக்கு நிலம் ஒதுக்கி வீடுகட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கதறி அழுதனர். இந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×