என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்ககோரி பெண்கள் போராட்டம்
    X

    கடமஞ்சேரி கிராமத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில்


    ஈடுபட்ட காட்சி


    மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்ககோரி பெண்கள் போராட்டம்

    • குண்டும் குழியுமான சாலையில் வாகனங்களில் செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
    • லையை சீரமைக்ககோரி அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கட மஞ்சேரி சாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் வேலூர் ஊராட்சிக்குட்பட்ட கடமஞ்சேரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இப்பகுதியில் உள்ள சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது. இதனால் சாலைகள் பெயர்ந்து, மேடு பள்ளங்களுடன் போக்கு வரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    சேதம் அடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    குண்டும் குழியுமான சாலையில் வாகனங்களில் செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்தநிலையில் சாலையை சீரமைக்ககோரி அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கட மஞ்சேரி சாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஊராட்சி தலைவர் சசிகுமார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×