என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே கால்வாய் பாதையை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடம் இடிப்பு
- பஞ்செட்டி ஊராட்சியில் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது.
- நீர்நிலையை ஆக்கிரமித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே பஞ்செட்டி ஊராட்சியில் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி நீர்நிலை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவுபடி பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் முன்னிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர்.
அவர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் நீர் வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த தனியார் பள்ளி கட்டிடத்தின் சுவரை இடித்து அகற்றினர்.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று தெரிகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீர்நிலையை ஆக்கிரமித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.






