என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
    • இன்று காலை பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் இருந்தபோது அங்கிருந்த சிலிண்டரில் திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

    இதற்காக மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் வெளியே வரும் பகுதியில் பிரசாதம் தயாரிக்கும் கூடம் தனியாக உள்ளது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், இன்று காலை பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் இருந்தபோது அங்கிருந்த சிலிண்டரில் திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது.

    உடனடியாக ஊழியர்கள் அனைவரும் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கியாஸ் கசிவை நிறுத்தினர்.

    இதனால் திருத்தணி கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீ முழுவதும்பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.
    • தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் வீடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பெருவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் வீட்டின் அருகே வைக்கோல்போர் வைத்துஇருந்தார். அதன் அருகியே மின்கம்பம் இருந்தது. இந்த நிலையில் மின்கம்பிகள் உரசியதில் தீப்பொறி பறந்து

    வைக்கோல்போர் மீது விழுந்து தீப்படித்தது. தீ முழுவதும்பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்த வந்து தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் வீடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

    • திருத்தணி கோவிலில் தற்போது மாசி கிருத்திகை விழா தொடங்கி நடந்து வருகிறது.
    • திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள். திருத்தணி கோவிலில் தற்போது மாசி கிருத்திகை விழா தொடங்கி நடந்து வருகிறது. இதனால் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்யும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது. மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் துணை ஆணையர் விஜயா முன்னிலையில் கோயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரொக்கம் மற்றும் 612 கிராம் தங்கம், 10 கிலோ 487 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்து இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • போதை பொருள் விழிப்புணர்வு பொது மக்களிடையே கையெழுத்து மற்றும் ஒரு நாள் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • திட்ட மேலாளர் ஜேசுராஜ், காட்டூர் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஊராட்சி மன்ற தலைவர்கள், செல்வராமன், முத்து, கோபி, தொகுப்பாளர் செண்பகவள்ளி மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த காட்டூர் ஊராட்சியில் காட்டுப்பள்ளி அதானி பவுண்டேஷன் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பொது மக்களிடையே கையெழுத்து மற்றும் ஒரு நாள் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக அதானி போர்ட் டெர்மினல் தலைவர் ராம்தேவ் கரன்சியாபாவனா, கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார்.

    இதில் திட்ட மேலாளர் ஜேசுராஜ், காட்டூர் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஊராட்சி மன்ற தலைவர்கள், செல்வராமன், முத்து, கோபி, தொகுப்பாளர் செண்பகவள்ளி மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்

    • மார்க நிர்வாகிகளை பொதுமக்கள் மனதார பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • அருள் சரவணன், மனோதத்துவ நிபுணர், ராமகிருஷ்ணன், பரத், தியாகு, பற்குணம் ஐயா, சங்கர், ராமு, குமரேசன், சுப்பையா , ஷாம், பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் ஆனந்த மாா்க யோகா மற்றும் தியான மையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நல உதவிகளை ஆனந்த மார்க்கத்தின் தலைவர் கின்ஷூக் ரஞ்சன் சர்க்கார் அவர்கள் வழங்கினார் இதில் கொரோனாகாலத்தில் 100 நாட்கள் உணவு, உடை மளிகை பொருட்கள் வழங்கிய தமிழ்நாடு ஆனந்த மாா்க்க தலைவர் மோகன் மற்றும் மாவட்ட தலைவர் பாலச்சந்தர் உட்பட பலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    பொன்னேரி ஆனந்த மாா்க்க தலைவர் பாபு, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் பாலசந்தர் திமுக மாணவர் அணி அமைப்பாளர் விக்னேஷ் உதயன் மற்றும் சுவாமிகள் யத்தீஸ்வரனந்தா அவதூத் பவேஷானந்தா அவதுத், கிருஷ்ண கிருபானந்தா அவதூத், மார்க நிர்வாகிகளை பொதுமக்கள் மனதார பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஆனந்த மாா்க்க நிர்வாகிகள் ராமச்சந்திரன் சிவா, ராஜா, கௌதம், இளங்கோ, காமராஜ், தன்ராஜ், செல்வராஜ், சித்கிருஷ்ணா, மோகன லல்லி, அகிலா, ஜனகவல்லி, ஜெயலட்சுமி, விஜயா, மோகன், ராஜசேகர், தர்ஷன், மாதேஷ், அருள், பார்த்திபன், முனுசாமி, சண்முகராஜ், கலைச் செல்வம், ராஜா, சேகர், அருள் சரவணன், மனோதத்துவ நிபுணர், ராமகிருஷ்ணன், பரத், தியாகு, பற்குணம் ஐயா, சங்கர், ராமு, குமரேசன், சுப்பையா , ஷாம், பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
    • தனிமையில் வசித்ததால் மனவேதனையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த என்.ஜி.ஓ. நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது85). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திரு மணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    தனலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். பக்கத்து தெருவில் வசிக்கும் அவரது மகன் ஒருவர் தனலட்சுமியை கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை தனலட்சுமி தனது வீட்டின் அருகில் வசிப்பவர்களை அழைத்தார். சிறிது நேரம் கழித்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது தனலட்சுமி மாயமாகி இருந்தார்.

    அவர் வீட்டில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். கிணற்றின் அருகில் நாற்காலியும் கிடந்தது.

    கிணற்றின் பக்கவாட்டு சுவர் உயரம் என்பதால் தனலட்சுமி நாற்காலி மீது ஏறி கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சம்பத் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறுகட்டி தனலட்சுமியின் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. தனிமையில் வசித்ததால் மனவேதனையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • விபத்தில் படைலால் பலத்த காயம் அடைந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் படைலால் (வயது 38). இவர் செங்குன்றத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதற்கிடையே பொன்னேரி அடுத்த காட்டாவூரில் உள்ள அரிசி ஆலையில் பாய்லரில் பழுது ஏற்பட்டது. இதனை சரிசெய்வதற்காக படைலால் வந்தார்.

    அவர் பணியில் ஈடுபட்ட போது திடீரென பாய்லர் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் படைலால் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி படைலால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்கோட்டை:

    பூண்டி அருகே உள்ள நெல்வாய் காலனி பகுதியில் வசித்து வருபவர் விஜயன். சத்துணவு மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புல்லரம்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் இன்று காலை விஜயன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்க நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
    • கைது செய்யப்பட்ட ஆறு பேரும் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தனிப்பிரிவு தலைமை காவலர் ராஜ்குமார் மற்றும் போலீசார் இன்று ஆரணி காவல் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்துக்கு இடமான வகையில் மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு வாலிபர்கள் வந்தனர்.அவர்களை நிறுத்தி சோதனை செய்ய போலீசார் முயற்சி செய்தனர்.ஆனால், அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்துவது போன்று பாவனை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் ஆரணி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகம் வழியாக தப்பிச் செல்ல முயன்றனர்.அவர்களை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்பொழுது அவர்கள் சுமார் 1.250 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கடத்திச் செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.எனவே, கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் ஆறு பேரும் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர்களான சபியுல்லா(வயது23), பிரவீன்(வயது22), விக்னேஷ்(வயது22), முனுசாமி(வயது23), கார்த்திக்(வயது22), வெங்கடேசன்(வயது23) என்பது தெரியவந்தது.

    மேலும், அவர்களிடமிருந்து ஆறு செல்போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்அழகன், தமிழ்ச்செல்வன், தினகரன், அஜித் ஆகிய 4 பேரும் ஜேக்கபை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
    • ஜேக்கப்பின் தாய் தாட்சாயணி கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கனகம்மாசத்திரம்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மாதவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 33). இவர் ஓசூர் பகுதியில் சிமெண்ட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 18-ந்தேதி வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது திருத்தணி அடுத்த நல்லாட்டூர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்படுத்தியதாக கூறி நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்அழகன், தமிழ்ச்செல்வன், தினகரன், அஜித் ஆகிய 4 பேரும் ஜேக்கபை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஜேக்கப் படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து ஜேக்கப்பின் தாய் தாட்சாயணி கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது தண்டலச்சேரி கிராமம்.
    • லாரி டிரைவரிடம் இருந்து 2 மர்ம நபர்கள் செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    கவரைப்பேட்டை:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது தண்டலச்சேரி கிராமம். இங்கு கடந்த 23-ந் தேதி இரவு கர்நாடகத்தை சேர்ந்த ரவிதேஷ் (வயது 41) என்கிற லாரி டிரைவரிடம் இருந்து 2 மர்ம நபர்கள் செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், லாரி டிரைவரிடம் செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்த வழக்கில் செய்யூரைச் சேர்ந்த திவ்யபிரகாஷ் (24), விபூசனன் (31) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    • திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி திருவிழா மற்றும் கிருத்திகையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் மாசி பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை என இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் முருகன், வள்ளி-தெய்வானை சமேதராய் எழுந்தருளி காட்சி தருகிறார்.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை, மாசித்திருவிழா மற்றும் கிருத்திகை என்பதால் திருத்தணி முருகன் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் திருத்தணி கோவில் வளாகம் முழுவதும் நிரம்பி வழிந்தது.

    திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி திருவிழா மற்றும் கிருத்திகையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று இரவு முதலே சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி தரிசனம் செய்தார்கள். மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். இதேபோல் வெளி பிரகாரத்தில் உள்ள உற்சவர் சன்னதியிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. பலர் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

    பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அலகு குத்தி காவடி எடுத்து மாடவீதி வலம் வந்தனர். இதனால் கோவில் வளாகம் மட்டுமல்லாமல் மாட வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ×