search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணி முருகன் கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் திடீர் கியாஸ் கசிவு
    X

    திருத்தணி முருகன் கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் திடீர் கியாஸ் கசிவு

    • திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
    • இன்று காலை பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் இருந்தபோது அங்கிருந்த சிலிண்டரில் திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

    இதற்காக மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் வெளியே வரும் பகுதியில் பிரசாதம் தயாரிக்கும் கூடம் தனியாக உள்ளது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், இன்று காலை பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் இருந்தபோது அங்கிருந்த சிலிண்டரில் திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது.

    உடனடியாக ஊழியர்கள் அனைவரும் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கியாஸ் கசிவை நிறுத்தினர்.

    இதனால் திருத்தணி கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×