என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
- வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை:
பூண்டி அருகே உள்ள நெல்வாய் காலனி பகுதியில் வசித்து வருபவர் விஜயன். சத்துணவு மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புல்லரம்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் இன்று காலை விஜயன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்க நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






