என் மலர்
உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு- 2 பேர் கைது
- கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது தண்டலச்சேரி கிராமம்.
- லாரி டிரைவரிடம் இருந்து 2 மர்ம நபர்கள் செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
கவரைப்பேட்டை:
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது தண்டலச்சேரி கிராமம். இங்கு கடந்த 23-ந் தேதி இரவு கர்நாடகத்தை சேர்ந்த ரவிதேஷ் (வயது 41) என்கிற லாரி டிரைவரிடம் இருந்து 2 மர்ம நபர்கள் செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், லாரி டிரைவரிடம் செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்த வழக்கில் செய்யூரைச் சேர்ந்த திவ்யபிரகாஷ் (24), விபூசனன் (31) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Next Story