என் மலர்
திருப்பூர்
- வெட் மிக்ஸ் 2300 இல் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்பட உள்ளது.
- டிப்பர் லாரி உரிமையாளர்கள் கற்கள் விளையினை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் பெருமாநல்லூரில் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்திற்கு பின் தலைவர் சந்திரன் கூறியதாவது:-
கட்டுமான பொருட்களான கருங்கற்கள், ஜல்லி, சிப்ஸ் ஆகியவற்றின் விலையினை குவாரி உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளார்கள். எனவே வேறு வழியின்றி டிப்பர் லாரி உரிமையாளர்கள் கற்கள் விளையினை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறோம். அதன்படி, எம் சாண்ட் ஒரு யூனிட் 3400 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தி விற்பனை செய்யப்படும்.
தரமான பி சாண்ட் 3500 இல் இருந்து நான்காயிரம் ரூபாயாகவும், முக்கால் இன்ச் ஜல்லி 2300 இல் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படும். ஒன்றரை இன்ச் ஜல்லி 2300 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்படும். சிப்ஸ் ஜல்லி 1300 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்படும்.
வெட் மிக்ஸ் 2300 இல் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்பட உள்ளது. பவுடர் 2000 ரூபாயில் இருந்து 2750 ரூபாயாக உயர்த்தி விற்கப்படும். குவாரி உரிமையாளர்கள் விலை உயத்திய கட்டாயத்தால் இந்த விலை உயர்த்த வேண்டிய நிலைக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆளாகி இருக்கிறோம் என்றார்.
- கட்டட ஒப்பந்தம் பதிவு செய்வதற்கான கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்ப ட்டுள்ளது.
- விடுதலைப்பத்திரம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
பதிவுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து, கட்டுமானத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக இந்திய கட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,
தமிழக அரசு அறிவித்து ள்ள பதிவுக் கட்டண உயர்வு அபரிமிதமாக உள்ளது. கட்டட ஒப்பந்தம் பதிவு செய்வதற்கான கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்ப ட்டுள்ளது. இதனால் பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அரசுக்கு தெரிவிக்காமலேயே பல பணிகள் நிறைவேற வாய்ப்புள்ளது.குடும்பத்தினர் அல்லாதோர் பொது அதிகாரம் பெறும்போது சொத்தின் மதிப்பில் 1 சதவீத கட்டணம் என அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொழில்முனைவோரை முடக்கிவிடும்.
விடுதலைப்பத்திரம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சொத்தை அடமானம் வைக்கும்போது அதற்கும் 50 சதவீத கட்டண உயர்வு என்பது ஏற்கத்தக்கதல்ல.தொழில் செய்வோரையும், மக்களையும் வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாஸ்கரன் என்பவர் கடந்த, 2017ல் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
- அனுப்பர்பாளையம் போலீஸ் ஏட்டு காளியப்பன், பல இடங்களில் தொடர்ந்து தேடி வந்தார்.
திருப்பூர்:
திருப்பூர், சின்னபொம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (60). கடந்த, 2003ல், இவரது வீட்டுக்குள் நுழைந்த, ஏழு பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களை காட்டி மிரட்டி, 42 சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணையில், திருவாரூரை சேர்ந்த பாஸ்கரன், 47 என்பவர் மட்டும் கடந்த, 2017ல் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால், அனுப்பர்பாளையம் போலீஸ் ஏட்டு காளியப்பன், பல இடங்களில் தொடர்ந்து தேடி வந்தார். இந்தநிலையில் பாஸ்கரன் திருப்பூரில் நடமாடுவது குறித்து தெரிந்தது. அவரை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கண்காணித்து வந்தார்.
அப்போது புஷ்பா சந்திப்பில், போலீசை பார்த்ததும், பாஸ்கரன் தப்பி ஓடினார். ஆனால், ஏட்டு விரட்டி சென்று பாஸ்கரனை மடக்கி பிடித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது போலீசில் சிக்காமல் இருப்பதற்காக ஏழு ஆண்டுகளாக அகோரியாக மாறி திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். இதனையடுத்து பாஸ்கரனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
- கோவில் பணியாளர்களின் சந்தேக ங்களுக்கும் விளக்கமளித்தனர்.
திருப்பூர்:
கோவில் வளாகங்களில் தீ விபத்து ஏற்படுவதை தடுப்பது குறித்தும், தீயை விரைவாக அணைப்பது தொடர்பாகவும், செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் ஸ்ரீவீரராகவ ப்பெருமாள் கோவில் வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான குழுவினர், தீ விபத்து ஏற்படுவது குறித்தும், விரைவாக செயல்பட்டு தீயை அணைப்பது தொடர்பாகவும்; மழை வெள்ளத்தில் இருந்து, உயிர்களை பாதுகாப்பது குறித்தும் பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து, கோவில் பணியாளர்களின் சந்தேக ங்களுக்கும் விளக்கமளித்தனர். செயல் அலுவலர் சரவணபவன், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
- திப்ரூகரில் புறப்படும் ரெயில், கடந்த ஒரு மாதமாக நீண்ட நேரம் தாமதமாக வருகிறது.
- தண்டவாள மேம்பாடு மற்றும் பாலம் சீரமைப்பு பணி நடக்கிறது.
திருப்பூர்:
அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் விவேக் எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.திப்ரூகரில் புறப்படும் ெரயில், கடந்த ஒரு மாதமாக வழக்கமான நேரத்தைக் காட்டிலும், நீண்ட நேரம் தாமதமாக ஈரோடு, திருப்பூர், கோவை நிலையங்களுக்கு வருகிறது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், அசாம், நாகலாந்து, மேற்கு வங்கம், பீஹார், ஒடிசா, ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகிய 8 மாநிலங்களை கடந்து 4,189 கி.மீ., இந்த ெரயில் பயணிக்கிறது. மொத்தம் 59 நிலையங்களில் நின்று செல்கிறது. நீண்ட தூரத்துக்கு இயக்கப்படும் ெரயில்களில் விவேக் எக்ஸ்பிரஸ் ெரயில் முதன்மையாகத் திகழ்கிறது. புறப்படும்போது தாமதம் ஏற்படுவதில்லை. ஏதேனும் ஒரு கோட்டத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் தாமதம் ஏற்படுகிறது. வரும் நாட்களில் இயக்கம் சீரடையும் என்றனர்.
மதுக்கரை, கஞ்சிக்கோடு, கண்ணுார் பகுதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடப்பதால் ெ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பாலக்காடு ெரயில்வே கோட்ட செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-
பாலக்காடு - கோவை மெமு ரெயில் ஏதேனும் ஒரு பகுதியில் 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்கோவை - மங்களூரு ெரயிலும் ஏதேனும் ஒரு பகுதிகளில், 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். மேலும் 19, 20 ஆகிய தேதிகளில் இந்த ெரயில் கஞ்சிகோட்டில், 15 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்படும். கோவை - சொரனூர் ெரயில் 19, 20 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு பகுதியில் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 14 மற்றும், 15 ந் தேதி ஆகிய 3 நாட்கள், ஆலப்புழா - தன்பாத் ெரயில் வழி மாற்றப்படுகிறது.
வருகிற 16-ந் தேதி வரை விஜயவாடா ெரயில்வே கோட்டத்தில், தண்டவாள மேம்பாடு மற்றும் பாலம் சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் ெரயில்களில் இயக்கம், வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
அவ்வகையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் (எண்:13351) ஆந்திர மாநிலம் நிட்டவொலு ஜங்ஷன் - விஜயவாடா இடையே வழித்தடம் மாற்றப்படுகிறது. இதனால், டேட்பெல்லிகுடம், ஏழுரூ நிலையங்களுக்கு செல்லாது. மாற்று வழியில் இயங்கும்.வழித்தடம் மாற்றம் காரணமாக அடுத்தடுத்த நிலையங்களுக்கும் ெ ரயில் வந்து சேர தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 16-ந் தேதி காலை, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த மாதம் 28ந் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கினர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எம்.பி.பி.எஸ்., - நர்சிங் - டி.ஜி.என்.எம்., மற்றும் டி.எம்.எல்.டி., - டி.ஆர்.டி.டி., அனஸ்டியா, தியேட்டர் டெக்னீசியன், ஆர்த்தோபெடிக் டெக்னீசியன் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் பெற்றோர், மாணவர் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 16-ந் தேதி காலை, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஈழத்தமிழர்களுக்காக மட்டும் மாநாடு நடத்தப்படவில்லை.
- இந்தியா உள்பட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பிற்காகவே மாநாடு நடக்கிறது.
திருப்பூர்:
தமிழ் ஈழ வரலாறு பற்றி புரிதல் மற்றும் இந்து சமுத்திர பாதுகாப்பில் ஈழத்தமிழர்களின் முக்கியத்துவம் குறித்த 4-வது சர்வதேச மாநாடு திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில்வழியை அடுத்த பொல்லிகாளிபாளையம் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு திருப்பூர் மகாலட்சுமி கோவில் கல்கி மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் தலைமை தாங்கினார். சிறுதுளி அமைப்பின் நிறுவனர் நிலா, மகாலட்சுமி கோவில் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம் தொகுதி எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. , கிணத்துக்கடவு தொகுதி தாமோதரன் எம்.எல்.ஏ., பழனி ஆதீனம் ஸ்ரீமத் போகர் சித்தர் புலிப்பாணி சுவாமிகள், இந்து மக்கள் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத்தலைவர் ஹரி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் யாழ் ஆறுச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் ஜெயந்தி, மும்பை இந்து யுவ பிரேரனா தலைவர் ஹரி ஐயர், டெல்லி தமிழர்கள் சமூக நல அறக்கட்டளை பெரியசாமி, பெங்களூரு குமரேசன், திண்டுக்கல் மதிவாணன், சாமித்தோப்பு அய்யாவழி சமய தலைவர் கேப்டன் சிவா திருவடிகள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
மாநாட்டில் கல்கி மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகள் பேசியதாவது:-
ஈழத்தமிழர்களுக்காக மட்டும் இந்த மாநாடு நடத்தப்படவில்லை. இந்தியா உள்பட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த மாநாடு நடக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வார்கள். இயற்கையை யாரும் குறை கூற முடியாது. எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் தர்மம் செய்யவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை. எனவே தர்மம் செய்ய வேண்டும்.
தர்மம் செய்வதை தயங்காமல் செய்தால் நம்முடைய வாழ்க்கை தழைத்தோங்கும். அநியாயங்களும், அக்கிரமங்களும் வேரூன்றி வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. இவைகள் என்றைக்கு வேரறுக்கப்படுகின்றதோ அன்றுதான் உலகம் நன்றாக இருக்கும்.
இவ்வாறு மகாலட்சுமி சுவாமிகள் பேசினார்.
சிறுதுளி அமைப்பின் நிறுவனர் நிலா பேசினார். இதில் சிறுதுளி அமைப்பின் இந்திய தேசிய ஒருங்கிணைப்பாளர் ராகுல் ரமேஷ், எஸ்.டபிள்யு.டி.டி. நிறுவனத்தின் தேசிய பொதுச்செயலாளர் சப்தகிரி ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
- மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
தாராபுரம்:
தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தாராபுரம் மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை)காலை 11 மணிக்கு பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தாராபுரத்தை சுற்றியுள்ள மின் நுகர்வோர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில் அவருக்கு ரூ.10 லட்சம் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- வீட்டின் மாடியில் பார்த்தசாரதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 46). இவருக்கு திருமணம் ஆகி மகள்கள் உள்ளனர். இவர் கொங்கு மெயின் ரோட்டில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார்.
பார்த்தசாரதி பங்கு சந்தை முதலீடு செய்து வந்துள்ளார். வங்கியில் கடன் பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில் அவருக்கு ரூ.10 லட்சம் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வங்கி கடனை குடும்பத்தினர் அடைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மேலும் ரூ.3 லட்சத்தை வங்கியில் கடன் பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்து பார்த்தசாரதி நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது.
இதில் வங்கிக்கு பணம் கட்டாததால் வங்கி ஊழியர்கள் அவரது வீட்டில் வந்து விசாரித்துள்ளனர். இதனால் மன உடைந்த நிலையில் அவர் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் மாடியில் பார்த்தசாரதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, வீடாக சென்று தன்னார்வலர்கள் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
- வீடு, வீடாக ஆய்வு செய்து தகவல் உள்ளீடு மற்றும் கள ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
திருப்பூர்:
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதியில் இருந்து தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் யார், யார் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டு வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, வீடாக சென்று தன்னார்வலர்கள் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி மூலமாக விவரங்கள் பெற்று அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், மாவட்ட வழங்கல் அதிகாரி ரவிச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் வரலட்சுமி ஆகியோர் பங்கேற்றார்கள்.
அதன்பிறகு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ள தன்னார்வலர்களுக்கு மாவட்ட பயிற்றுனர்களுக்கான பயிற்சிக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த ரேஷன் கடை பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்களை பெற உள்ளனர். வீடு, வீடாக ஆய்வு செய்து தகவல் உள்ளீடு மற்றும் கள ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.முதல்கட்டமாக அவர்களுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.
- இரையை தூக்கி செல்லும் சிறுத்தை அவற்றை வயிறாற தின்று விட்டு குகைக்குள் பதுங்கி கொள்கிறது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை அங்கு பதுங்கியிருந்து வருவதுடன், மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.
காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் இன்னும் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இருந்து வருவதுடன், தொடர்ந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.
சம்பவத்தன்று இரவு அங்குள்ள தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, இரும்பு சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை அலேக்காக தூக்கி சென்றது. பின்னர் காலை ஆட்டுப்பட்டியை பார்க்க சென்ற விவசாயி அங்கு கட்டப்பட்டிருந்த நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சங்கிலிகள் சேதமடைந்தது மற்றும் சிறுத்தையின் கால்தடங்கள் இருந்ததை வைத்து சிறுத்தை நாயை தூக்கி சென்றதை உறுதி செய்தனர்.
4 மாதமாகியும் சிறுத்தை பிடிபடாததால் ஊதியூர் பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கும் நிலை உள்ளது. வனத்துறையினர் கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
ஊதியூர் மலைப்பகுதி மிகவும் வளம்மிக்கது. மேலும் மலையை சுற்றிலும் அதிக பரப்பளவில் காப்புக்காடுகள் உள்ளன. இந்த காப்பு காட்டில் மான்கள் அதிக எண்ணிக்கையில் உலா வருகிறது. அதுமட்டுமல்ல மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் ஆட்டுப்பட்டி, மாட்டுப்பட்டி அமைத்து ஆடு, மாடுகளை தோட்டத்து உரிமையாளர்கள் வளர்த்து வருகிறார்கள்.
இந்த மலையில் பதுங்கி உள்ள சிறுத்தை அவ்வப்போது அடிவார பகுதிக்கு வந்து நாய், மாடு மற்றும் ஆடுகளை தூக்கி சென்று விடுகிறது. அதுவும் மலையில் ஆங்காங்கே குகை போன்ற அமைப்பு உள்ளது. அங்கு தேவையான தண்ணீர் இருக்கிறது. இரையை தூக்கி செல்லும் சிறுத்தை அவற்றை வயிறாற தின்று விட்டு குகைக்குள் பதுங்கி கொள்கிறது. பின்னர் பசிக்கும்போது கீழே வந்து வேட்டையாடுகிறது. அதனால்தான் அதை பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் விரைவில் சிறுத்தையை பிடித்துவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முதற்கட்டமாக 6 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
- 464 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை மேற்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை கோருதல், சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 464 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 வட்டாரங்களிலுள்ள 122 ஊராட்சிகளில் நுண் தொழில் நிறுவன நிதி கடன் திட்டமானது செயல்படுத்தப்பட்டு முதற்கட்டமாக 6 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் காசோலைகளை கலெக்டர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.15, 945 மதிப்பீட்டில் கைபேசி மற்றும் பிரெய்லி கைக்கடிகாரம் மற்றும் மடிப்பு குச்சி ஆகியவை வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் , மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார், உதவி கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






