திருப்பூர் பெருமாள் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை

ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கோவில் பணியாளர்களின் சந்தேக ங்களுக்கும் விளக்கமளித்தனர்.
தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றக் காட்சி.
தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றக் காட்சி.
Published on

திருப்பூர்:

கோவில் வளாகங்களில் தீ விபத்து ஏற்படுவதை தடுப்பது குறித்தும், தீயை விரைவாக அணைப்பது தொடர்பாகவும், செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் ஸ்ரீவீரராகவ ப்பெருமாள் கோவில் வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான குழுவினர், தீ விபத்து ஏற்படுவது குறித்தும், விரைவாக செயல்பட்டு தீயை அணைப்பது தொடர்பாகவும்; மழை வெள்ளத்தில் இருந்து, உயிர்களை பாதுகாப்பது குறித்தும் பயிற்சி அளித்தனர்.

தொடர்ந்து, கோவில் பணியாளர்களின் சந்தேக ங்களுக்கும் விளக்கமளித்தனர். செயல் அலுவலர் சரவணபவன், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com