search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agori"

    • பாஸ்கரன் என்பவர் கடந்த, 2017ல் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
    • அனுப்பர்பாளையம் போலீஸ் ஏட்டு காளியப்பன், பல இடங்களில் தொடர்ந்து தேடி வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர், சின்னபொம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (60). கடந்த, 2003ல், இவரது வீட்டுக்குள் நுழைந்த, ஏழு பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களை காட்டி மிரட்டி, 42 சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வழக்கு விசாரணையில், திருவாரூரை சேர்ந்த பாஸ்கரன், 47 என்பவர் மட்டும் கடந்த, 2017ல் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால், அனுப்பர்பாளையம் போலீஸ் ஏட்டு காளியப்பன், பல இடங்களில் தொடர்ந்து தேடி வந்தார். இந்தநிலையில் பாஸ்கரன் திருப்பூரில் நடமாடுவது குறித்து தெரிந்தது. அவரை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கண்காணித்து வந்தார்.

    அப்போது புஷ்பா சந்திப்பில், போலீசை பார்த்ததும், பாஸ்கரன் தப்பி ஓடினார். ஆனால், ஏட்டு விரட்டி சென்று பாஸ்கரனை மடக்கி பிடித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது போலீசில் சிக்காமல் இருப்பதற்காக ஏழு ஆண்டுகளாக அகோரியாக மாறி திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். இதனையடுத்து பாஸ்கரனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×