என் மலர்
திருப்பூர்
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் குமார்நகரை அடுத்த வளையங்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 36). தையல் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (45). நண்பர்களான இருவரும் மதியம் முதல் திருப்பூர் காந்திநகர் அருகே மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில் இரவு இருவரும் டாஸ்மாக் பாரை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது பாண்டியன் காளிமுத்துவை பார்த்து "பல் இல்லாத உனக்கு எதற்கு பொண்டாட்டி" என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த காளிமுத்து அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து உனக்கு பல் இருப்பதால் தானே இப்படி பேசுகிறாய் உன் பல் அனைத்தையும் உடைத்து விடுகிறேன் என்று கூறிக்கொண்டு பாண்டியன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். பாண்டியன் கீழே தரையில் படுத்திருந்த நிலையில் காளிமுத்து உருட்டு கட்டையால் தொடர்ந்து பாண்டியன் முகத்தில் ஓங்கி அடித்தார்.
இதில் பலத்த காயமடைந்த பாண்டியனின் 5 பற்கள் உடைந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காளிமுத்துவை தடுத்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காளிமுத்துவை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாரத்திற்கு 2 முறை வந்து கொண்டிருந்த தண்ணீர் 2 வாரத்துக்கு ஒரு முறை வரும் சூழல் நிலவுகிறது.
- மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
உடுமலை:
உடுமலை பகுதியில் நிலவுகின்ற நிர்வாக குளறுபடிகள், குடிநீர் குழாய் உடைப்புகள் காரணமாக கிராமங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.இதனால் வாரத்திற்கு 2 முறை வந்து கொண்டிருந்த தண்ணீர் 2 வாரத்துக்கு ஒரு முறை வரும் சூழல் நிலவுகிறது.
இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாள்தோறும் குடிநீரை வழங்க முடியாமல் பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறார்கள். இது தொடர்பாக மன்ற நிர்வாக கூட்டங்களில் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை
. மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யாத குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகம் எதற்கு?அதில் பணிபுரியும் அதிகாரிகள் எதற்கு? என்ற கேள்வியே நம் முன்னே நிற்கிறது.கிராமங்களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கணக்கீடு செய்து தண்ணீர் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
எனவே பொதுமக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் உடுமலை பகுதி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, திருப்பூர் ஊரகப் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்., 20ம் தேதிக்குள், உரிய விவரங்களுடன் அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
கடை அமையும் இடத்தின் வரைபடம். பட்டா மற்றும் ஆவணம், உரிமக்கட்டணம், 600 ரூபாய் செலுத்திய சலான், சொத்து வரிக்கான ரசீது, வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், விண்ணப்பதாரர் போட்டோ, முகவரி சான்று மற்றும் தீயணைப்பு துறை சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில், கூறியுள்ளார்."
- அமராவதி பாளையம் பகுதியில் வாரம் தோறும் திங்கள்கிழமை மாட்டு சந்தை நடைபெறும்
- கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்து இருந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் அமராவதி பாளையம் பகுதியில் வாரம் தோறும் திங்கள்கிழமை மாட்டு சந்தை நடைபெறும். அதன்படி இந்த வாரம் அமராவதி பாளையம் மாட்டு சந்தையில் 642 மாடுகள் 146 வாகனங்களில் கொண்டுவரப்பட்டது.மாடுகளை வாங்கவும் விற்கவும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்து இருந்தனர். மாட்டுசந்தையில் கறவை மாடுகள் ரூ.47 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் வரை விற்பனை ஆனது. பசு கன்றுகள் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனை ஆனது. எருமை கன்றுகள் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.5 கோடி ரூபாய்க்கு அமராவதி பாளையம் மாட்டு சந்தையில் விற்பனை நடைபெற்றது.
- அதிக செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட, கெட்டுப்போன கோழி இறைச்சிகளை கைப்பற்றி அழித்தனர்.
- 8 கடை உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 16 கிலோ கெட்டுப் போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்பேரில், திருப்பூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில், மாவட்டத்தில் உள்ள சவா்மா தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து அசைவ உணவகங்க ளிலும் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் அதிக செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட, கெட்டுப்போன கோழி இறைச்சி சுமாா் 16 கிலோ, கெட்டுப் போன மீன் இறைச்சி 3.5 கிலோ, காலாவதி ஆகி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த சுமாா் 750 கிராம் மயோனிஸ் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்த 5 உணவு வணிகா்களுக்கு ரூ.1,000 வீதம், ரூ.5 ஆயிரம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த ஒரு உணவு வணிகருக்கு ரூ.2 ஆயிரம் என மொத்தம் 6 கடைக்காரா்களுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப ட்டது.
மேலும், 43 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, 8 கடை உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டம் முழுவதும் சவர்மா கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சவர்மா தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்றவர்களிடம் மட்டுமே கோழி இறைச்சி போன்ற மூலப் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இறைச்சி மற்றும் இதர மூல பொருட்கள் வாங்கியதற்கான பில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் யாராவது இந்த விதிமுறை களை பின்பற்றாமல் சவர்மா தயாரித்து விற்பனை செய்தால் அவர்கள் கடைகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சீல் வைக்கப்படும். பொதுமக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சவர்மா போன்ற உணவுப் பொருட்களை வாங்கும்போது அது தரமானதாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து உணவு பொருட்களை வாங்க வேண்டும். எந்த ஒரு உணவு பொருட்கள் வாங்கும் போதும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் அவர் கூறினார்.
- கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
- மின்கசிவு, மின் சுற்று கோளாறுகள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
காங்கயம் :
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக கல்வித்துறை, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, அக்டோபர் முதல் டிசம்பர் வரையான கால அளவில், இயல்பான அளவில் பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் பருவ மழை காரணமாக விபத்துகள் எதுவும் ஏற்படாமல் இருக்க பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்று சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்று சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளை சுற்றி, வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் சில வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அதை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும்.
அனைத்து மின் இணைப்புகள் சரியாக இருக்கின்றனவா எனவும், மின்கசிவு, மின் சுற்று கோளாறுகள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மின் இணைப்பை துண்டிக்கலாம். மின் மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தில் நீர் தேக்க பள்ளங்கள், திறந்த வெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, தரை மட்ட நீர் தேக்க தொட்டி இருந்தால் அது மூடப்பட்ட நிலையில், பாதுகாப்பாக உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.ஆபத்தான நிலையில் உயர் மின்னழுத்தம் உள்ள மின் கம்பங்கள், அறுந்து தொங்கக்கூடிய மின் கம்பிகள் இருந்தால் அதை மின்வாரியத்தின் உதவியுடன் அகற்ற வேண்டும்.
பள்ளியில் உள்ள அனைத்து கட்டடங்களின் மேற்கூரைகள், கைப்பிடி சுவர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், ஜன்னல் கதவுகள் உறுதியாக இருக்கிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் இருப்பின் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் அதன் அருகே செல்லாமல் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 125 விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 921கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.45லட்சத்து ஆயிரத்து 600க்கு வணிகம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை 125 விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 921கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 77.90 க்கும், குறைந்தபட்சம் ரூ.58 க்கும் கொள்முதல் செய்தனர்.
நேற்று மொத்தம் ரூ.45லட்சத்து ஆயிரத்து 600க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
- உடுமலையை அடுத்த பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித் .
- ரஜினி படங்களின் கதாபாத்திரங்களை போல களிமண்ணால் சிலை செய்து ரஜினியிடம் வாழ்த்து பெற்றவர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித் . நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர் புதிதாக வெளியாகும் ரஜினி படங்களின் கதாபாத்திரங்களை போல களிமண்ணால் சிலை செய்து ரஜினியிடம் வாழ்த்து பெற்றவர். இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் மற்றும் வெளிவர உள்ள லால் சலாம் ஆகிய படங்களின் ரஜினி கதாபாத்திரத்தோற்றங்களை களிமண் மூலம் சிலை வடித்துள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை செய்து அசத்தியுள்ளார்.இவரை அப்பகுதி மக்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தினர்.
- 10-ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது
- சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருப்பூர் :
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10-ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் (SOP) www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிகல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரியகல்வி சான்றிதழ்களை இணைத்து 3.10.2023 தேதிக்குள் திருப்பூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரிவித்துள்ளார்.
- பழங்குடியின வகுப்பை சார்ந்த நபர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
- அலுவலக மாநில திட்ட மேலாளரை (திட்டங்கள்) செல்போன் எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம்
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்(தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த நபர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது உள்ள ஆண்/பெண் அனைவரும் 27.9.2023க்குள் விண்ணப்பிக்கலாம். பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல்- டீசல் (ஒரு டேங்கர்) தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும். பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளரை (திட்டங்கள்) செல்போன் எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501(ம) 503, 5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியிலும், 94450 29552, 0421-2971112 என்ற செல்போன்-தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு, தனியார் துறையாக அறிவிக்க வேண்டும்.
- மகளிர் உரிமை திட்டத்து க்காக, களப்பணியில் ஈடுபட்ட ரேஷன் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகிகள் கூட்டம், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு, தனியார் துறையாக அறிவிக்க வேண்டும். ரேஷன் பணியாளர் அனைவரையும் பி.எப்., திட்டத்தில் சேர்க்க வேண்டும். பல கூட்டுறவு சங்கங்களில் தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்குகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
மகளிர் உரிமை திட்டத்து க்காக, களப்பணியில் ஈடுபட்ட ரேஷன் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். காலாவதியாகாத தரமான மளிகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அனைத்து பொருட்களும் 10-ந்தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- மகுடி -சிர்புர் டவுன் - காகஸ்நகர் பிரிவு இடையே புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்குகிறது.
- ெரயில் ஆகிய 5 ெரயில்கள் தெலுங்கானா மாநிலம், சிர்பூர் காகஸ்நகர் நிலையத்தில் நிற்காது
திருப்பூர்,செப்.20-
செகந்திராபாத் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட, மகுடி -சிர்புர் டவுன் - காகஸ்நகர் பிரிவு இடையே புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்குகிறது. இதனால் அவ்வழியாக பயணிக்கும் ெரயில்கள் வழித்தடம், இயக்கம், நின்று செல்லும் நிலையங்கள் குறைக்க ப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி பிலாஸ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர ெரயில் (எண்: 22815) மஜ்ரி ஜங்ஷன் - பெட்டபல்லி ஜங்ஷன் வழியாக மாற்று வழியில் இயக்கப்படும். வழக்கமான வழித்தடமான சந்திராபூர், பால்ஹர்ஷஹ் ஜங்ஷன், சிர்பூர் காகஸ்நகர் நிலையங்களுக்கு செல்லாது.
இதே நாளில் கொச்சுவேலி - கோர்பா (எண்:22648) ரெயில், அட்டவணையில் உள்ள வழித்தடமான கம்மம், வாரங்கல், ராமகுண்டம், பெலம்பல்லி, டுர்க் ஜங்ஷன் வரை 10 நிலையங்களுக்கு செல்லாது. விஜயவாடா - பிலாஸ்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும்.
நாளை 21, 22 மற்றும் 24-ந்தேதி, கோரக்பூர் - கொச்சுவேலி ெரயில் (எண்:12511) இன்று 20 மற்றும் 23ந்தேதி கோர்பா - கொச்சுவேலி ெரயில் (எண்: 22647), 21ந்தேதி, கொச்சுவேலி - கோர்பா (எண்:22648), 22ந் தேதி எர்ணாகுளம் - பரூனி (எண்:12522), இதே நாளில் கோவையில் இருந்து புறப்படும் ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:12969) ெரயில் ஆகிய 5 ெரயில்கள் தெலுங்கானா மாநிலம், சிர்பூர் காகஸ்நகர் நிலையத்தில் நிற்காது என தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






