திருப்பூர் அமராவதிபாளையம் சந்தையில் ரூ.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

அமராவதி பாளையம் பகுதியில் வாரம் தோறும் திங்கள்கிழமை மாட்டு சந்தை நடைபெறும்கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்து இருந்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர் : 

திருப்பூர் அமராவதி பாளையம் பகுதியில் வாரம் தோறும் திங்கள்கிழமை மாட்டு சந்தை நடைபெறும். அதன்படி இந்த வாரம் அமராவதி பாளையம் மாட்டு சந்தையில் 642 மாடுகள் 146 வாகனங்களில் கொண்டுவரப்பட்டது.மாடுகளை வாங்கவும் விற்கவும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்து இருந்தனர். மாட்டுசந்தையில் கறவை மாடுகள் ரூ.47 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் வரை விற்பனை ஆனது. பசு கன்றுகள் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது.

எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனை ஆனது. எருமை கன்றுகள் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.5 கோடி ரூபாய்க்கு அமராவதி பாளையம் மாட்டு சந்தையில் விற்பனை நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com