என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
    X

    கோப்புபடம்

    உடுமலை பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

    • வாரத்திற்கு 2 முறை வந்து கொண்டிருந்த தண்ணீர் 2 வாரத்துக்கு ஒரு முறை வரும் சூழல் நிலவுகிறது.
    • மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

    உடுமலை:

    உடுமலை பகுதியில் நிலவுகின்ற நிர்வாக குளறுபடிகள், குடிநீர் குழாய் உடைப்புகள் காரணமாக கிராமங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.இதனால் வாரத்திற்கு 2 முறை வந்து கொண்டிருந்த தண்ணீர் 2 வாரத்துக்கு ஒரு முறை வரும் சூழல் நிலவுகிறது.

    இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாள்தோறும் குடிநீரை வழங்க முடியாமல் பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறார்கள். இது தொடர்பாக மன்ற நிர்வாக கூட்டங்களில் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை

    . மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யாத குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகம் எதற்கு?அதில் பணிபுரியும் அதிகாரிகள் எதற்கு? என்ற கேள்வியே நம் முன்னே நிற்கிறது.கிராமங்களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கணக்கீடு செய்து தண்ணீர் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

    எனவே பொதுமக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் உடுமலை பகுதி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×