என் மலர்
திருப்பத்தூர்
- காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்
- சுவாமிகள் பூஜை செய்தார்
திருப்பத்தூர்:
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பரணி கிருத்திகை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி சாத்துப்படி செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பரணிக்கிருத்திகை முன்னிட்டு ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.
அதேபோல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமி, வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசுவாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோவில், கைலாசகிரிமலை கொசப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில், திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பேர்ணாம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், வளையாம்பட்டு பழனி யாண்டவர் கோவில், ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோவில், ஏலகிரி மலை பாலமுருகன் கோவில், அணைக்கட்டு மூளை கேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை வடதிருச்செந்தூர் முருகன் கோவில், கம்மவான்பேட்டை முருகர் கோவில், தம்டகோடி மலை முருகர், தட்டமலை முருகர் கோவில், ரெட்டிபாளையம் முருகர் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பரணி கிருத்திகை முன்னிட்டு பூக்காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி, பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து 'அரோகரா' கோசமிட்டபடி பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவில்களில் காவடி தண்டி சாத்துபடி செய்யும் இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பக்தர்கள் வெள்ளி வேல் அலகு குத்தியும், சிறிய மற்றும் பெரிய தேரை இழுத்து வந்தும், அந்தரத்தில் தொங்கிய படி பறக்கும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- மாட்டு கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பாச்சல் கிராமம், ஜே.பி. நகரை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 35). இவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1.60 லட்சம் மதிப்பில் மாட்டு கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மலர்கொடி வீட்டில் நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (29) மலர்கொடியிடம் தகராறு செய்துள்ளார்.
இதனைப் பார்த்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் ராஜேஷ், கார்த்திக்கை தட்டி கேட்டுள்ளார். 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கார்த்திக் அருகில் இருந்த கட்டையை எடுத்து ராஜேஷை சரமாறியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ராஜேஷ் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை தேடி வருகின்றனர்.
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளிக்கு போலீஸ் வலை வீச்சு
- கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் காமராஜர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி செல்வி (வயது 42). தாமோதரன் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார்.
இதனை அறிந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் செல்வியிடம் உன்னுடைய கணவர் கொரோனாவில் இறந்து விட்டதால், அரசு சார்பில் பணம் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் தாலுகா அலுவலகத்தில் பணம் கொடுத்தால் மட்டுமே உங்கள் கணவரின் இறப்பு பணம் கிடைக்கும் எனக் கூறி செல்வியின் காதில் இருந்த ½ பவுன் கம்மல் மற்றும் ரூ.500 ஆகியவற்றை வாங்கிக்கொண்டார். பின்னர் நான் முன்னால் இரு சக்கர வாகனத்தில் தாலுகா அலுவலகம் செல்கிறேன்.
நீங்கள் பின்னால் வாருங்கள் எனக் கூறிவிட்டு சென்றார். செல்வி தாலுகா அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்தும் அந்த நபர் வரவில்லை.
இதனால் செல்வி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திருப் பத்தூர்டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மாற்றுத்திறனாளியை தேடி வருகின்றனர்.
- பேரணாம்பட்டு சாலையில் சென்றபோது விபத்து
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 33) விவசாயி இவர் தனது தங்கை குழந்தைகள் சிவன்யா (6) ரக்ஷனா வயது (7) ஆகியோரை மாச்சம்பட்டு பகுதியில் உள்ள டியூசனில் இருந்து அழைத்துக் கொண்டு பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
பேரணாம்பட்டு சாலையில் சென்றபோது எதிரே வந்த பைக் எதிர்பாராத விதமாக சீனிவாசன் பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் எதிர்திசையில் வந்த வாணியம்பாடி அடுத்த மாரப்பட்டு பகுதியை சேர்ந்த ரிஸ்வான் (48) தொழிலாளி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
அவருடன் வந்த வாணியம்பாடி தாலுகா மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அருண் (40) சீனிவாசன் (சிவன்யா) ரக்ஷனா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த அருண் சீனிவாசன் உள்ளிட்ட 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக பேரணா ம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் அருண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதல் தகராறில் விபரீதம்
- ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் சண்முகம் (வயது 30).
இவர் அதேப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சண்முகத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்து விட்டது.
அதேபோல் அவர் காதலித்த பெண்ணிற்கும், வாலிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணம் நடைபெற உள்ள நிலையில் சண்முகம், தனது காதலிக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள வாலிபருடன் பேசி இளம்பெண் குறித்து தவறாக கூறி உள்ளார்.
இதனை பார்த்த பெண்ணின் சித்தப்பா அவரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ஆதியூர் மாரியம்மன் கோவில் அருகே சண்முகத்திற்கும், அவரது பழைய காதலியின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சண்முகம் காதலித்த பெண்ணின் உறவினரான கவுசல்யா என்பவரைகத்தியால் தாக்கி கையில் கிழித்து உள்ளார். மேலும் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வரும் ஆதியூர் ஊராட்சியை சேர்ந்த பாஸ்கர் மகன் வல்லரசு (25) என்பவரின் மார்பிலும் கத்தியால் சண்முகம் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த வல்லரசு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, வல்லரசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓட முயன்ற சண்முகத்தையும் கைது செய்தனர்.
- பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏலகிரி மலைக்கு வருகின்றனர்
- விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் குறைவாகவே இருந்தது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
எப்பொழுதும் ஒரே சீதோஷ்ண நிலை உள்ளதால் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏலகிரி மலைக்கு வருகின்றனர். மேலும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் வந்து செல்கின்றனர்.
அவர்கள் இங்குள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, மங்களம் சுவாமி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களையும் ரசித்து செல்கின்றனர்.
அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குறைவாக வந்ததால் படகு சவாரி பகுதியில் வெறிச்சோடி காணப்பட்டது.
- தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஆளப்பெரியானூர் கிராமத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவரின் வீட்டில் பாம்பு புகுந்தது.
அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உடனடி யாக நாட்ட றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ½ மணி நேரம் போராடி சுமார் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்தனர்.
இதேபோல நாட்டறம்ப ள்ளி அருகே சோமநா யக்கன்பட்டி பகுதியில் உள்ள ஜெர்ரா வட்டத்தில் வசித்து வரும் முனுசாமி என்பவரின் வீட்டில் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பாம்பை பிடித்தனர். நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் 2 பாம்புக ளையும் வனத்துறை மூலம் காப்பு காட்டில் விட்டனர்.
நாட்டறம்பள்ளி பகுதியில் அடிக்கடி வீடுகளில் பாம்புகள் நுழை வதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியில் அத்திமா குலப்பள்ளி கிராமம் உள்ளது.
ஊர் மக்கள் அங்கு உள்ள புறம்போக்கு இடத்தில் குலதெய்வக் கோவில் கட்டுவதாக புகார் வந்த நிலையில் அதை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாரதியை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது
- ரூ.16 கோடியில் நடக்க உள்ளது
ஜோலார்பேட்டை:
இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் 'அம்ரீத் பாரத்' ரெயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரெயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.
ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணி களின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மற்றும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்ட பணிகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரூ.16 கோடியில் நடக்க உள்ள திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன், திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, ரெயில்வே சென்னை கோட்ட பொறியாளர் மயிலேறி, ஜோலார்பேட்டை நகராட்சி தலைவர் காவியாவிக்டர், ரெயில்வே மேலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதே போல் அரக்கோணம் ெரயில் நிலையத்திலும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. சு.ரவி எம்.எல்.ஏ. மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரெயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- 2 வருடம் வரை தாய்ப்பால் கொடுத்த தாய்மார்களுக்கு ஊக்கப்பரிசு
- உறுதிமொழி எடுத்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே குனிச்சி அரசு சமுதாய சுகாதார நிலை யத்தில் தாய்ப்பால் வார விழா நடந்தது. கந்திலி வட்டார மருத்து அலுவலர் தீபா தலைமை தாங்கினார். சேஞ்ச் நிறுவன நிறுவனர் பழனிவேல்சாமி முன்னிலை வகித்தார்.
இதில் தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவித்தல், பணிபுரியும் பெற்றோரிடம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது டாக்டர் தீபா குழந் தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவாகும், இது பாதுகாப் பானது, சுத்தமானது, குழந்தைகளை நோய்களிலிருந்து பாது காக்க உதவும். எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது. 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று தாய்ப்பா லின் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார்.
இதில் 2 வருடம் வரை தாய்ப்பால் கொடுத்த தாய்மார்க ளுக்கு ஊக்கப்பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் அனைத்து தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில் சேஞ்ச் நிறுவன இயக்குனர் சரஸ்வதி நன்றி கூறினார்.
- வெகுமதி மற்றும் சான்றிதழை வழங்கினார்
- உருக்குலைந்து நிலையில் இருந்த உடலை சுரண்டி எடுத்து வாளியில் சேகரித்தார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முனிரத்தினம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் நடந்த சாலை விபத்தில் வடமாநில இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்தார்.
மேலும் மே மாதம் மல்லப்பள்ளி பகுதியில் இளைஞர் ஒருவரின் மீது தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து பல வாகனங்கள் ஏறியதால் அடையாளம் தெரியாத வகையில் உடல்கள் உருக்குலைந்து நிலையில் இருந்தது கண்டு உடலை சுரண்டி எடுத்து வாலியில் சேகரித்தார்.
இது சம்பந்தமாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாலையில் நசுங்கி கோரமாக காணப்பட்ட உடல்களை சிறிதளவும் தயக்கமின்றி முகத்தை சுழிக்காமல் கடமை மனப்பான்மையுடன் திடமாக பணியாற்றி சாலையில் இருந்து அகற்றியதைப் பாராட்டி திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் வேலூர் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.






