என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆய்வுக்கு சென்ற ஊழியருக்கு அடி-உதை
- மாட்டு கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பாச்சல் கிராமம், ஜே.பி. நகரை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 35). இவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1.60 லட்சம் மதிப்பில் மாட்டு கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மலர்கொடி வீட்டில் நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (29) மலர்கொடியிடம் தகராறு செய்துள்ளார்.
இதனைப் பார்த்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் ராஜேஷ், கார்த்திக்கை தட்டி கேட்டுள்ளார். 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கார்த்திக் அருகில் இருந்த கட்டையை எடுத்து ராஜேஷை சரமாறியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ராஜேஷ் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை தேடி வருகின்றனர்.






