என் மலர்
நீங்கள் தேடியது "It is said that he was pushed down and injured"
- ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கட் டேரி பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மாதவன் (வயது 36). கட்டேரி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
கடந்த 4-ந் தேதி கட்டேரி ஊராட்சி கே.ஆர்.எஸ். வட் டம் பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க பணி மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கே.எஸ்.மோகன் (62) என்பவர் தனது வீட்டின் அருகே சாலை போடக்கூடாது என கூறியுள்ளார். இதனை மாதவன் தட்டி கேட்டுள்ளார்.
உடனே மோகன் மற்றும் இவரது மகன் அருண்குமார் ஆகிய இருவரும் ஊராட்சி மன்ற தலைவரை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த மாதவன் சிகிச்சைக்காக திருப் பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதேபோல் மோகன் சாலை போடும் ஊழியரிடம் 2 அடி இடைவெளி விட்டு சாலை போடும் படி கேட்டதால் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ரமேஷ் ஆகியோர் வந்து மோகன் மற்றும் அருண்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன், இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






