என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி
    X

    விபத்தில் இறந்தவர்களை படத்தில் காணலாம்.

    பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி

    • பேரணாம்பட்டு சாலையில் சென்றபோது விபத்து
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 33) விவசாயி இவர் தனது தங்கை குழந்தைகள் சிவன்யா (6) ரக்ஷனா வயது (7) ஆகியோரை மாச்சம்பட்டு பகுதியில் உள்ள டியூசனில் இருந்து அழைத்துக் கொண்டு பைக்கில் வீட்டிற்கு சென்றார்.

    பேரணாம்பட்டு சாலையில் சென்றபோது எதிரே வந்த பைக் எதிர்பாராத விதமாக சீனிவாசன் பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் எதிர்திசையில் வந்த வாணியம்பாடி அடுத்த மாரப்பட்டு பகுதியை சேர்ந்த ரிஸ்வான் (48) தொழிலாளி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

    அவருடன் வந்த வாணியம்பாடி தாலுகா மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அருண் (40) சீனிவாசன் (சிவன்யா) ரக்ஷனா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த அருண் சீனிவாசன் உள்ளிட்ட 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக பேரணா ம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் அருண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×