என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு சவாரி பகுதியில் வெறிச்சோடி காணப்பட்டது"

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏலகிரி மலைக்கு வருகின்றனர்
    • விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் குறைவாகவே இருந்தது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

    எப்பொழுதும் ஒரே சீதோஷ்ண நிலை உள்ளதால் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏலகிரி மலைக்கு வருகின்றனர். மேலும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் வந்து செல்கின்றனர்.

    அவர்கள் இங்குள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, மங்களம் சுவாமி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களையும் ரசித்து செல்கின்றனர்.

    அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குறைவாக வந்ததால் படகு சவாரி பகுதியில் வெறிச்சோடி காணப்பட்டது.

    ×