என் மலர்
திருப்பத்தூர்
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டம் லத்தேரி காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயதுதக்க ஆண் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது க சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் கருப்பு கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலிசார் விசாரணை செய்து வருகின்றனர் இறந்தவரின் முகம் முழுவதும் சிதைந்த இருப்பதால் இறந்தவரை அடையாளம் காண்பதில் போலிசாருக்கு சவாலாக உள்ளது.
- ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது
- தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் பஜார் பகுதியில் பேன்சி ஸ்டோர் இயங்கி வருகிறது. இந்த ஸ்டோரில் மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், விளையாட்டு பொருட்கள் உள்பட அனைத்தும் உள்ளது.
காலையில் கடை திறப்பதும் இரவில் மூடி செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு பேன்சி ஸ்டோரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது . இதனால் ஸ்டோர் முழுவதும் எரிய தொடங்கியது. தீ மள மளவென பரவி அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளுக்கும் பரவியது.
பேன்சி ஸ்டோரில் தீப்பிடித்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கும், வாணியம்பாடி, திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்து கொண்டே தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தால் நேற்று இரவு ஆம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆத்மா திட்டத்தின் திருவிழா நடைபெற்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கலந்தரா ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் வேளாண்மை துறையின் ஆத்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஷ்தி என்ற விவசாயத் திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.
ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இதில் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பா அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இதில் விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்களை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆத்மா மானிய விலையில் திட்ட தலைவர் சரவணன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மேரி வீனஸ், உதவி தொழில் நுட்ப மேலாளர் ஸ்ரீநாத், வேளாண்மை உதவி அலுவலர் அனிதா, ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்
- ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு சென்றனர்
ஆம்பூர்:
மாதனூர் அடுத்த கீழ்முருங்கை ஊராட்சியில் ஸ்ரீ சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் மூலவர் மற்றும் நந்தி மீது நுமார் 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு பின்னி, பிணைந்து படம் எடுத்து ஆடியது.
இதனைப் பார்த்த கிராம மக்கள் மற்றும் கோவில் பூசாரி பாம்பிற்கு கற்பூர தீபாரணை காட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்வு குறித்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் நடந்த அதிசய நிகழ்வை வந்து பார்வையிட்டு சாம தரிசனம் செய்தனர்.
- சாலையில் தகராறு ஏற்பட்டுள்ளது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூரை அடுத்த வெங்கடா சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வர்ரமேஷ் (வயது 40). கூலி வேலை செய்து வருகிறார்.
அதேப்ப குதியை சேர்ந்த அன்பரசன் (35) என்பவருக்கும், ரமேசுக்கும் இடையே ஆம்பூர் பைபாஸ் சாலையில் தகராறு ஏற்பட்டுள் ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அன்பரசன் அருகே இருந்த கல்லை எடுத்து ரமேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரமேஷ் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பர சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தபால்காரர் மூலமாக தங்களின் வீடுகளுக்கே வினியோகம்
- அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
திருப்பத்தூர்:
சுதந்திரதின பெருவிழாவை அனைத்து இல்லங்களிலும் தேசி யக் கொடியை பறக்க விட்டு கொண்டாடிட பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய தேசிய கொடி அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பொருட்டு திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூபாய் 25 மட்டுமே.
தேசியக் கொடியை http:// www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்ப டுத்தி தபால்காரர் மூலமாக தங்களின் வீடுகளுக்கே பட்டு வாடா செய்யும்படி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் ரூ.25 மட்டும் செலுத்தி தேசியக்கொடியை பெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் கொடுத்து சுதந்திர தின பெரு விழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக தேசியக்கொடியை வாங்கிட விரும்பினால் திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் குடியாத்தம் தலைமை அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளவும்.
இத்தகவலை திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப் பாளர் மு.மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- ஒடிசா மாநிலம் சேர்ந்தவர்
- காப்பகத்தில் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்துள்ளார்.
சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த ஆதார் அட்டை மூலம் இவர் ஒடிசா மாநிலம் ஜெய்பூர் அடுத்த பைடினாத் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் பாரி பந்தா என்பவரின் மகன் சத்ய ப்ராட்டா பந்தரா (வயது40) என தெரிந்தது.
இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து இவரை திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் மனநலக் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த குன்னத்தூர் பகு தியை சேர்ந்தவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஆடி. கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருந்து நேற்று ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு மினி லாரியில் சென்றனர்.
குன்னத்தூரை சேர்ந்த சின்னராஜ் (வயது 55) மினி லாரியை ஓட்டிச் சென் றார்.
ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து, வேண்டுதலை நிறை வேற்றிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். ஏலகிரி மலை 3-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது மினி லாரி நிலைதடு மாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில் மினி லாரியில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 3 ஆம்புலன்ஸ் கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக் காக திருப்பத்தூர் அரசு மருத் துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வை யிட்டு விசாரணை மேற் கொண்டனர்.
மினி லாரியை ஓட்டி சென்ற டிரைவரும், உரிமையாளருமான சின்னராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் தலைமறைவான டிரைவர் சின்னராஜை இன்று காலை ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தல்
- 2 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள சோலூர் ஊராட்சியில் தனியார் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்தனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தோல் தொழிற்சாலை மூடப்பட்டது.
அப்போது பாதி பேருக்கு சம்பளம் நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மென்ட் வழங்கப்பட்டது. மேலும் பலருக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பலமுறை தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் பலமுறை நிலுவைத் தொகை வழங்க கோரியும், இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பூட்டி கிடந்த தோல் தொழிற்சாலையை கதவுகள் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
சம்பளம் நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மெண்ட் வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது
- தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தீயணைப்பு துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சார்பில் அரசனப்பள்ளி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தீ விபத்து விழிப்புணர்வு மற்றும் போலி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் 300 மாணவ மாணவிகள் முன்னிலையில் தீ விபத்து விழிப்புணர்வு மற்றும் பருவ மழை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
மேலும் போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 6 நாட்களுக்கு நடக்க உள்ளது
- சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தீவிர மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சி கல்நார்சம்பட்டி கிராமத்தில் நடந்தது.
மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தடுப்பூசிகளை தவற விட்ட குழந்தைகளுக்கு முதல் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமானது மாநிலம் முழுவதும் வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 9% லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெ றுகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 368 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாதது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி அவர்கள் இருப்பிடம் அருகிலேயே போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 6 நாட்களுக்கு நடக்க உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக் டர் மீனாட்சிதேவி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பியூலா ஏஞ்சலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி கூத் தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பேபி (வயது 65), இவர்களுடைய 2-வது மகன் செல்வராஜ் (39). இவர் தனது தாயிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
சொத்தை பிரித்து கொடுக்காததால் தனது தாய் பேபியை தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து பேபி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார் பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






