என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேன்சி ஸ்டோரில் மின் கசிவால் தீ விபத்து
    X

    பேன்சி ஸ்டோரில் மின் கசிவால் தீ விபத்து

    • ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது
    • தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பஜார் பகுதியில் பேன்சி ஸ்டோர் இயங்கி வருகிறது. இந்த ஸ்டோரில் மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், விளையாட்டு பொருட்கள் உள்பட அனைத்தும் உள்ளது.

    காலையில் கடை திறப்பதும் இரவில் மூடி செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு பேன்சி ஸ்டோரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது . இதனால் ஸ்டோர் முழுவதும் எரிய தொடங்கியது. தீ மள மளவென பரவி அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளுக்கும் பரவியது.

    பேன்சி ஸ்டோரில் தீப்பிடித்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கும், வாணியம்பாடி, திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்து கொண்டே தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த தீ விபத்தால் நேற்று இரவு ஆம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×