என் மலர்
நீங்கள் தேடியது "The survey found that 368 children were not vaccinated"
- மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 6 நாட்களுக்கு நடக்க உள்ளது
- சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தீவிர மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சி கல்நார்சம்பட்டி கிராமத்தில் நடந்தது.
மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தடுப்பூசிகளை தவற விட்ட குழந்தைகளுக்கு முதல் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமானது மாநிலம் முழுவதும் வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 9% லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெ றுகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 368 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாதது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி அவர்கள் இருப்பிடம் அருகிலேயே போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 6 நாட்களுக்கு நடக்க உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக் டர் மீனாட்சிதேவி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பியூலா ஏஞ்சலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






