என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • பக்தர்களை அச்சுறுத்தியதால் நடவடிக்கை
    • காப்பு காட்டில் விடப்பட்டன

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த தட்டல் அருகே உள்ள பைரப்பள்ளி, துருகம் வனப்பகுதியில் ஊட்டல் தேவஸ்தானம் உள்ளது.

    இங்கு சரஸ்வதி கோவில், நந்தி தேவர் கோவில், விநாயகர், நவகி ரகங்கள், சப்த கன்னியர், சீதாராமர், லட்சுமணர் கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்ற னர். வனப்பகுதியில் கோவில்கள் அமைந்துள்ள தால் இங்கு ஏராளமான குரங்குகள் நடமாடி வருகின்றன.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் வைத்திருக்கும் தின்பண்டங்களையும் பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய், பழம் ஆகியவற்றையும் குரங்குகள் பறித்து செல்கின்றன.

    மேலும் பக்தர்களை காயப்படுத்தியும் அச்சுறுத்தி யும் வந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகினர். பக்தர்களின் பாதுகாப்பை கோவில் நிர்வாகம் உறுதி செய்ய குரங்குகளை பிடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆம்பூர் வனத்து றையினர் உதவியுடன் கோவில் வளாகத்தில் சுற்றி வந்த குரங்குகளை பிடிக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே இரும்பு கூண்டுகள் வைக்க ப்பட்டன. இதன் மூலம் 45-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டுக்கு சிக்கின.

    பிடிபட்ட குரங்குகள் பேரணாம்பட்டு பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் வி. கோட்டா சாலையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் கவுண்டன்யா வனவி லங்குகள் சரணாலய காப்பு க்காட்டில் விடப்பட்டன.

    இதை அறிந்த பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.இருப்பினும் மீண்டும் குரங்குகள் வராமல் இருக்க கோவில் நிர்வாகம் தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தார்வழிப் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 67). தனியார் ஷீ கம்பெனியில் காவலாளி. இவர் நேற்று இரவு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்படு சென்றார்.

    சாலையை கடக்கும் போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு கூரியர் பார்சல் லாரி குணசேகரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூரியர் பார்சல் லாரி டிரைவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாக்குதல் நடத்தியதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன் என்பவர் ஊராட்சி துப்புரவு பெண் தொழிலாளி மணி மனைவி சிவகாமி (வயது 45) என்பவரை தாக்கியதாகவும், திட்டியதாகவும் கூறி பெரியங்குப்பம் ஊராட்சி 9-வது வார்டு துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை 7 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பழைய மின்னூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேட் (வயது 72). கூலி தொழிலாளி.

    நேற்று இரவு 7 மணி அளவில் வாணியம்பாடி ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சேட் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் சேட் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சேட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலை விபத்து நிகழ்ந்தது.
    • இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். சண்டியூர் பகுதியில் வேனில் சுற்றுலா சென்று வீடு திரும்பும்போது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விபத்தில் ஆம்பூர் ஒனாங்குட்டை பகுதியைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளாதவும், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுற்றுலா சென்று வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வெயிலின் தாக்கத்தால் மயக்கம் ஏற்பட்டுள்ளது
    • முதலுதவி சிகிச்சை பெட்டியை வைத்திருக்க பொதுமக்கள் வலியுறுதல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கடலைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (48). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் செல்வி 100 நாள் வேலைக்கு சென்றார்.

    வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி கிழே விழுந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கி ருந்தவர்கள் உடனே செல்வியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மராட்டிபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், '100 நாள் வேலைக்கு செல்வோர் அவசரத்தில் சாப்பிடாமல் சென்று விடுகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தால் செல்விக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி ஒரு பிரச்னையும் இல்லை. சிறிது நேரம் ஓய்வு எடுத்தாலே போதும்' என்றனர். பணியின்போது பெண் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுவாக 100 நாள் வேலை என்பது பெரும்பாலும் ஏரி, குளம், குட்டை, ஆற்று கால்வாய் போன்ற நீர் நிலை பகுதிகளில் தான் வேலை நடக்கும். அப்போது, பணியாளர்கள் வேலை செய்து கொண் டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விஷப்பூச்சி கடிப்பது, உடைந்த கண்ணாடி பாட்டில் குத்தி கொள்வது போன்றவை நடக்கிறது.

    அவ்வாறு நடக்கும் போது ஆஸ்பத்திரி செல்ல அதிக நேரம் ஆவதால் 100 நாள் வேலை நடக்கும் ஒவ்வொரு ஊராட்சியிலும் முதலுதவி சிகிச்சை பெட்டியை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனத்துறையிடம் ஒப்படைப்பு
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் அருகே உள்ள மம்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ரஷீத். இவர் வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வளைத்து பிடித்தனர்.

    அதேபோல் நாட்டறம்பள்ளி சின்னசாமி தெருவை சேர்ந்த ராணுவ வீரர் வினோத் வீட்டில் இருந்த 6 அடி நீலமுள்ள நாகப்பாம்பு, புதுப்பேட்டை பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவர் வீட்டில் புகுந்த 3 அடி நீளம் உள்ள நாக பாம்பு, ஆத்தூர்குப்பம் அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வீட்டின் பின்புறத்தில் பதுங்கி இருந்த 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு உள்ளிட்டவை களையும் தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.

    பிடிபட்ட அனைத்து பாம்பு களையும் வனத்துறையினர் எடுத்து சென்று காப்பு காட்டில் விட்டனர்.

    • போலீசார் விசாரணை
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் திவாகர் (வயது 18). பால் வியாபாரி. இவர் இன்று காலை ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பின் புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு தயாராக உள்ளதாக தகவல்
    • 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது

    ஜோலார்பேட்டை:

    வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

    ஜோலார்பேட்டை ஒன்றியம் கட்டேரி ஊராட்சிக்கு உட்பட்ட கட்டேரியம்மன் கோவில் பின்புறம் திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் ஒரு அடி முதல் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

    அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

    • நகராட்சி ஆணையாளர் உத்தரவு
    • முறையாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடவில்லை என புகார்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இந்த வார்டு பகுதிகளில் பல்வேறு வரி இனங்களை வசூல் செய்வ தற்காக நகராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நகராட்சி வருவாய் உதவியாளராக (பில் கெலக்டர்) பணி யாற்றி வருபவர் தேவகுமார். இவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் முறையாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடவில்லை என்றும், நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத் தும் வகையில் நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்தது.

    அதன் பேரில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் அவரை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இது வாணியம்பாடி நகராட்சி ஊழியர்க ளிடையே பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிஸ்கட் கொடுத்து துணிகரம்
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணமேடு ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இந்த ஆடுகள் காலை நேரத்தில் மெய்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர். அந்த ஆடுகள் சாலைகளில் உணவு தேடி மாலைநேரத்தில் வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.அப்போது அவ்வழியாக காரில் குடும்பத்துடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பித்து ஆட்டுக்கு பிஸ்கெட் கொடுப்பது போல் நாடகமாடி ஒரு ஆட்டை காரில் தூக்கி போட்டனர். இதே போல் 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுககொண்டு சென்றனர்.

    இதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக கார் நின்று ஆடுகளை திருடுவது கண்டு தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைத்த ளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலா னதால் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த கார் காலை 9 மணிக்கு பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை கடந்து வாணியம்பாடி நோக்கி வந்த காட்சிகள் நெக்குந்தி டோல் கேட் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசி டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே ஆடுகளை திருடி சென்ற கும்பல் வெளியூறை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    • கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் வெளியேறவில்லை
    • நோய் தொற்று ஏற்படும் அபாயம்

    திருப்பத்தூர் :

    திருப்பத்தூர் நகராட்சியில் 7- வது வார்டு டபேதர் முத்துசாமி தெருவில் அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் வெளியேறாமல் அசுத்தமாக உள்ளது. அதன் காரணமாக நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதனை சரி செய்யக்கோரி வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் விரைந்து சென்று அடிப்படை வசதிகளை செய்து தரவும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×