என் மலர்
திருப்பத்தூர்
- கேமராக்கள் பழுதால் தப்பிய திருடன்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 31), எலக்ட்ரிசியன். இவரது மனைவி பூஜா (23).
திருட்டு
8 மாதம் கர்ப்பிணியான பூஜா வழக்கம்போல் நேற்று பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பரிசோதனை செய்து முடிந்த பிறகு, மாத்திரை வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், பூஜா தனது பையை தோளில் மாட்டிக்கொண்டு இருந்தார். மாத்திரை வாங்கி விட்டு பையை பார்த்தபோது, அது திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது பையில் வைத்திருந்த ரூ.14 ஆயிரத்ததை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
பணத்தை இழந்த அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார். அவரது அழுகையை பார்த்த பொதுமக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பின்னர் பொதுமக்கள் பூஜாவை சமாதானம் செய்து அவரது தந்தை முத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமாராக்களை ஆய்வு செய்யும் படி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கூறினர்.
கேமராக்கள் பழுது
அப்போது ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்வதில்லை என அலட்சியமாக ஊழியர்கள் பதில் கூறினர்.
இதனையடுத்து முத்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களின் தேவைக்காக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
- பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்
- மக்களுக்கு ஆட்டோ மூலம் எச்சரிக்கை
ஜோலார்பேட்டை:-
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ெரயில்வே ஜங்ஷன் அருகே பெரிய ஏரி உள்ளது.
தற்போது இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பிய நிலையில் மீன்கள் இனப்பெருக்க உற்பத்தி மூலம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை ஏரி கரையின் பகுதிகளில் ஆங்காங்கே பெரிய அளவிலான மீன்கள் செத்து மிதந்து கிடந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறையினர் செத்து மிதந்து கிடந்த மீன்களை பார்வையிட்டு தற்போது மீன்களுக்கு அம்மை நோய் வந்திருப்பதாகவும். இதனால் மீன்கள் இறக்கும் நிலை ஏற்படும். எனவே மீன்களை பிடித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும் இது குறித்து அப்பகுதி மக்களுக்கு ஆட்டோ மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் கைகளால் பெற்றுக் கொண்டார்
- போலீசார் உடனிருந்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் கிரிசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரவீன்குமாருக்கு என்பவர் சென்னையில் உள்ள ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக கோப்பையும் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதை வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பழனியிடம் கொடுத்து அவர் கைகளால் பெற்றுக் கொண்டார். அப்போது தனி பிரிவு போலீசார் மூர்த்தி மற்றும் போலீஸ் நிலைய போலீசார் உடன் இருந்தனர்.
- வீட்டில் மாணவிக்கு எந்த பிரச்சினையும் இல்லை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி நேரு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் பிருந்தா (வயது 14). அதேப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவி வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்தார். வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 'மாணவி பிருந்தா பள்ளி சீருடையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். வீட்டிற்கு வரும்போது அவர் கவலையோடு வந்துள்ளார். வீட்டில் மாணவிக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட வில்லை.
வீட்டுக்கு வந்ததும் பெற்றோரிடம் பிருந்தா சகஜமாக பேசி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி தற்கொலை குறித்து போலீசார் அவர் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பள்ளியில் ஏதாவது மன உளைச்சல் ஏற்படும் அளவிற்கு சம்பவம் நடந்ததா? அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தரமற்ற முறையில் பராமரிப்பு பணி
- பொதுமக்கள் குற்றம் சாட்டு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்டலவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடம் கடந்த ஆண்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
பராமரிப்பு பணி முடிந்த பிறகு பயன்பாட்டுக்கு வராமல் திறப்பு விழாவுக்கு காத்திருந்தது.
சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட வகுப்பறை கட்டிடத்தில் இன்று காலை திடீரென சீலிங் சிமெண்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. வகுப்பறை பயன்பாட்டுக்கு வராத தால், அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
தரமற்ற முறையில் பராமரிப்பு பணி நடந்ததாகவும், அதனை தெரிந்தும் கூட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
வகுப்பறை கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
- திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
சிறுமிகள் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. மேலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தினர்.
திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
- 12 கிலோ போதைபொருள் பறிமுதல்
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார், திருப்பத்தூர் மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கையில் பையுடன் சுற்றி திரிந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், அவர் ஆந்திர மாநிலம் கடதுல்லா கிராமத்தை சேர்ந்த கிரி சாணி மகேஸ்வராவ் (வயது 28) என்பதும், இவர் பையில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை சேலம் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் ஜெயிலில் அடைத்தனர்.
- துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது
- சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்ப டுகிறது.
இதில் 4-வது வார்டு மற்றும் 9-வது வார்டு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கழிவுநீர் எப்போதும் அதிக அளவு தேங்கியிருப்பதால், உடைப்பு ஏற்பட்ட பைக் வழியாக கழிவுநீர், குடிநீரோடு கலக்கிறது.
இதனை சற்றும் கவனிக்காத பொதுமக்கள், கடந்த ஒரு வாரமாக கழிவு நீர் கலந்த குடிநீரையே குடிப்பதுடன், சமையல் செய்வது உள்ளிட்ட அனைத்து பயன்பா டுகளுக்கும் உபயோகித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி, மணிமாறன், ஜெயபால், விக்கி, சாமு, மாதேஸ்வரன், விமல், கலையரசன், மாதேஸ்வரி உள்ளி ட்டோருக்கு திடீரென மயக்கம், வாந்தி உள்ளிட்ட உடல் உபா தைகள் ஏற்பட்டது.
அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். கிராமத்தில் உள்ளவர்க ளுக்கு திடீரென உடல் உபாதைகள் ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு, அந்த வழியாக குடிநீரோடு, கழிவுநீர் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கவனிக்காமல் பொது மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் திடீரென உடல் பாதிப்புகள் ஏற்பட காரணம் என தெரிய வந்தது.
இதனை அடுத்து வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமை யில் சுகாதாரத் துறையினர் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் உடல் பரி சோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினார்.
மேலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கேசவன்(வயது 43),கட்டிட மேஸ்திரி.
இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான கணபதி(36) என்பவருடன் ஆலங்காயத்தில் இருந்து நிம்மியம்பட்டு நோக்கி பைக்கில் சென்றார்.
அப்போது சுண்ணா ம்புபள்ளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கேசவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணபதி மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவர் செல்வராஜை தேடி வருகின்றனர்.
- கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெள்ளைகுட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி ஆர்த்தி. கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோனா ஸ்ரீ என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
சூர்யா மற்றும் தன் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தையுடன் பெண்ணின் தாய் நிர்மலா வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
பின்னர் மனைவி குழந்தையை பெண்ணின் தாய் வீட்டிலேயே விட்டு விட்டு சூர்யா கட்டிட வேலைக்கு பெங்களூருக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 9 -ந் தேதி சூர்யா மாமியார் வீடான கலர் வட்டத்திற்கு வந்து 3 நாட்களாக அங்கேயே தங்கினார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஆர்த்தி தன் கை குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.
பெண்ணின் கணவர் மற்றும் பெண்ணின் தாயார் இருவரும் ஆர்த்தியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கை குழந்தையுடன் காணாமல் போன ஆரத்தியை தேடி வருகின்றனர்.
மேலும் குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னமணி (வயது 38), விவசாயி.
இவரது மனைவி நித்யா (31). தம்பதியினர் 2 பேரும் நேற்று தங்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது நிலத்தில் படுத்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு, நித்யாவின் காலில் கடித்தது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நித்யாவை மீட்டு சிகிச்சை க்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் ஹிமாவுடன் தங்கி இருந்த நண்பர்களை, ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஜோலார்பேட்டை:
ஆந்திர மாநிலம் திருப்பதி எம்.ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி ஹிமா (வயது 23), நடன கலைஞர். தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஹிமா தனது நண்பர்களான நடன கலைஞர்களுடன் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்தார். ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் ஹிமா உள்பட 8 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 10 பேர் நேற்று இரவு முழுவதும் தங்கினர்.
இந்த நிலையில் இன்று காலை ஹிமா விடுதி அறையில், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனைப் பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் ஹிமாவுடன் தங்கி இருந்த நண்பர்களை, ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்கில் பிணமாக தொங்கிய பெண் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






