கை குழந்தையுடன் பெண் மாயம்

கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது போலீசார் விசாரணை
கை குழந்தையுடன் பெண் மாயம்
Published on

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெள்ளைகுட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி ஆர்த்தி. கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோனா ஸ்ரீ என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

சூர்யா மற்றும் தன் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தையுடன் பெண்ணின் தாய் நிர்மலா வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

பின்னர் மனைவி குழந்தையை பெண்ணின் தாய் வீட்டிலேயே விட்டு விட்டு சூர்யா கட்டிட வேலைக்கு பெங்களூருக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9 -ந் தேதி சூர்யா மாமியார் வீடான கலர் வட்டத்திற்கு வந்து 3 நாட்களாக அங்கேயே தங்கினார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஆர்த்தி தன் கை குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.

பெண்ணின் கணவர் மற்றும் பெண்ணின் தாயார் இருவரும் ஆர்த்தியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்ற போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கை குழந்தையுடன் காணாமல் போன ஆரத்தியை தேடி வருகின்றனர்.

மேலும் குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com