என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாய்லர் விபத்து"

    • அருகே இருந்த வீட்டின் மீது கற்கள் விழுந்து சேதமானது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த சின்ன குரும்பதெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் மஞ்சம் புல் பயிரிடப்பட்டுள்ளது.

    இன்று காலை மஞ்சம் புல்லில் மூலிகை தைலம் தயாரிப்பதற்காக முனுசாமி, சிவா, சீனு என்பவர்கள் 2 டன் பாயிலரை விவசாய நிலத்திற்கு கொண்டு சென்றனர்.

    அப்போது பாய்லர் சூடுடாகி அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியது. பாய்லர் வெடித்து சிதறியதில் அருகே இருந்த வீட்டின் மீது கற்கள் விழுந்தது இதில் வீடுகள் சேதமானது.

    அருகில் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடு பரிதாபமாக இறந்தது. முனுசாமி என்பவர் படுகாயம் அடைந்தார். பாய்லர் வெடித்து சிதறிதில் பொருட்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று விழுந்தது. படுகாயம் அடைந்த முனுசாமியை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×