ஏலகிரி மலையில் பள்ளி மாணவி மாயம்

பிளஸ்-1 படித்து வருகிறார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
ஏலகிரி மலையில் பள்ளி மாணவி மாயம்
Published on

ஜோலார்பேட்டை:

ஆம்பூர் அடுத்த நாயக்னேரி பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுமி. இவர் ஏலகிரி மலையில் உள்ள புங்கனூர் கிராமத்தில் தனது தாத்தா சின்னராஜ் என்பவரின் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி காலை தனது தாத்தாவிடம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஏலகிரி மலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமன போன சிறுமியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com