என் மலர்
தேனி
- பிடிபட்ட தேனி நபர் ஏற்கனவே நரபலி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.
- வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் உறுப்பு பாகங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைாபஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணி அளவில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 4 பேரும் சந்தேகப்படும்படி இருந்ததால் அவர்களை காரை விட்டு கீழே இறங்க வைத்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் 3 பேர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அதில் நாக்கு, மூளை, கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்பு பாகங்கள் தனித்தனியாக பிளாஸ்டிக் கவரில் பார்சலாக சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த உடல் உறுப்புகள் மனிதருடையதா அல்லது விலங்குகள் உடையதா என தெரிய வில்லை. இது குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் உறுப்பு பாகங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பிடிபட்ட தேனி நபர் ஏற்கனவே நரபலி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர். இவர் மீது மாந்தரீக வேலையில் ஈடுபட்டு மோசடி செய்ததாகவும், வழக்குகள் பதிவாகி உள்ளது. எனவே யாரையேனும் நரபலி கொடுத்து அவர்களது உடல் உறுப்புகளை விற்பனைக்காக கொண்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்ட சிவகங்கை மாவட்ட கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நோய்கொடுமையால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே கண்ட மனூர் ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் மதன்குமாார் (வயது26). கூலித்தொழி லாளி. கடந்த சில மாதங்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மதன்கு மார் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. எனவே வீட்டி லேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கண்டமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (55). இவருக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டதால் விரக்தி அடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்மபாளையம் போலீசார் விசாரித்து வரு கின்றனர்.
- மாற்றுத்திறனாளிகள் இயற்கை மரணம், ஈமச்சடங்கிற்கான நிவாரண உதவித்தொகை, விபத்து மரணத்திற்கான உதவி த்தொகை மாற்றுத்திறனாளி யின் வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி:
தமிழ்நாடு மாற்றுத்திற னாளிகள் நல வாரியம் சமுக பாதுகாப்புத் திட்ட த்தின் கீழ், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டை பெற்று 10 வயதிற்கு மேற்பட்ட மாற்று த்திறனாளிகள் நல வாரி யத்தில் பதிவு செய்திருப்பின் உதவிகள் பெற முடியும்.
இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் இயற்கை மரணம், ஈமச்சடங்கிற்கான நிவாரண உதவித்தொகை, விபத்து மரணத்திற்கான உதவி த்தொகை மாற்றுத்திறனாளி யின் வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது.
நல வாரியத்தின் மூலம் மாற்றுத்தறனாளியின் மகன்-ம களுக்கு கல்வி உதவித்தொகை பெற 10-ம் வகுப்பு அதற்கு மேல் படிப்பவர்களாக இருத்தல் வேண்டும், மாற்றுத்திற னாளியின் மகன்-மகளுக்கு நலவாரியத்தின் மூலம் திருமண உதவித்தெகையும், மாற்றுத்திறனாளிகள் கண் கண்ணாடி வாங்கி பயன் பெறுவதற்கும், மாற்றுத்திறனாளிக்கு விபத்து ஏற்பட்டால் நல வாரியத்தின் மூலம் விபத்து நிவாரணம் மற்றும் பெண் மாற்றத்தினாளிக்கு நல வாரியத்தின் மூலம் பிரச வம், கருச்சிதைவு ஆகிய வற்றிற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு பிற அரசுத் துறைகளிடமிருந்து நல வாரிய திட்டத்தில் உதவித் தொகை பெற்றிரு க்கக்கூடாது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலக த்தில் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெ க்டர் ஷஜீவனா தெரி வித்துள்ளார்.
- 2ம் கட்ட முகாம் ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
- ரேசன் கடைப் பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றினை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு முதற்கட்ட முகாம் பெரிய குளம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்றது. நாளை முதல் 2ம் கட்ட முகாம் ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை ரேசன் கடைப் பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றினை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.
விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டு முழுமை யாக பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப ப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு, டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் விண்ணப்ப ங்களை எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண அட்டை, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும்.
ஆண்டிபட்டி வருவாய் வட்டத்தில் ஆண்டிபட்டி பிட் 1, 2 பாலகோம்பை உள்பட கிராமங்களில் நடைபெறுகிறது. போடி வருவாய் வட்டத்தில் அகமலை, பி.அம்மாபட்டி உள்பட 15 கிராமங்களில் நடைபெற உள்ளது. தேனி வருவாய் கோட்டத்தில்அல்லிநகரம், கோவிந்தநகரம் உள்பட 12 கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- லட்சுமிபுரத்தில் தனியார் நாப்கின் மற்றும் முக கவசம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென தீப்பற்றியது.
- ரூ.3.68 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் தனியார் நாப்கின் மற்றும் முக கவசம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் முடியவில்லை. மேலும் மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து பெரியகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருந்தபோதும் 18 எந்திரங்கள், உதிரி பாகங்கள், மூலப்பொருட்கள் உள்பட ரூ.3.68 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மயானத்தை சீரமைத்து புதிதாக கட்டிடப் பணிகள் மேற்கொள்வத ற்காக ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- மேலும் கட்டிடப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கை கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி வருவாய் நிர்வாகத்தில் கேரளம் மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது போடி மெட்டு.
இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக இங்குள்ள மயானம் சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில் பொது மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மயானத்தை சீரமைத்து புதிதாக கட்டிடப் பணிகள் மேற்கொள்வத ற்காக ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கட்டிடப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதிதாக கான்கிரீட் தகன மேடை, தியானம் மற்றும் ஓய்வு அறை மற்றும் சுற்றுச்சு வர்கள் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் காளி கண்ணன் ராமசாமி , செயல் அலுவலர் இளங்கோவன், மற்றும் அலுவலக உதவியாளர்கள் சரவணன், சேகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டுபோடி மெட்டு பகுதியில் நடைபெறும் மயான கட்டிட சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் கட்டிடப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கை கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
- அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களை கொண்டு மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.
- இந்நிலையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில 1736 மெகாவாட் மின்உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
கூடலூர்:
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பருவமழை இந்த ஆண்டு ஏமாற்றியது. இதனால் முல்ைலபெரியாறு அணைக்கு போதிய நீர்வரத்து வரவில்லை. ஒருசில நாட்கள் மட்டுமே மழை பெய்த நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது அணையின் நீர்மட்டம் 121 அடியில் உள்ளது.
அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களை கொண்டு மின்சார உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில 1736 மெகாவாட் மின்உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 8000 மெகாவாட் மின்சாரம் குறைவாகும். அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் மதுரை மண்டல தலைமை பொறியாளர் பெரியாறு அணை பகுதியில் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மெயின்அணை, பேபிஅணை, கேலரி, உபரிநீர் வெளியேறும் பகுதி, சீஸ்மோகிராப், வல்லக்கடவு ரோடு, தேக்கடி தலைமதகு பகுதி உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டார்.
அணையில் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கிய அவர் வெள்ள காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.45 அடியாக உள்ளது. வரத்து 291 கனஅடி, திறப்பு 400 கனஅடி, இருப்பு 2915 மி.கனஅடி.
வைகை அணை நீர்மட்டம் 48.19 அடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1826 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 23.46 அடியாகவும் உள்ளது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையது இப்ராஹிம் வீட்டுக்கு ஷீலா வந்தார்.
- தனது லேப்டாப்பில் பலவிதமான வீட்டு அலங்கார படங்களை காண்பித்து சையது இப்ராஹிமை நம்ப வைத்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அம்மாகுளத்தைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம் (வயது 44). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு உள் அலங்கார வேலை செய்வதற்காக ஆட்களை தேடி வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் கூறிய ஆலோசனையின் பேரில் சென்னை கொடுங்கையூர் லெட்சுமி அம்மன் நகரைச் சேர்ந்த ஷீலா என்பவரிடம் செல்போன் மூலம் பேசினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையது இப்ராஹிம் வீட்டுக்கு ஷீலா வந்தார். அவர் தனது லேப்டாப்பில் பலவிதமான வீட்டு அலங்கார படங்களை காண்பித்து சையது இப்ராஹிமை நம்ப வைத்தார்.
உள் அலங்கார வேலைக்கு மொத்தம் ரூ.26 லட்சம் செலவாகும் என தெரிவித்தார். அதன்படி அன்றைய தினமே ரூ.5 லட்சமும், அதன் பிறகு பல தவணைகளாக மொத்தம் ரூ.15.50 லட்சம் பணத்தை ஷீலாவுக்கு கொடுத்தார்.
பணத்தை பெற்றுக் கொண்டு அவர் வீட்டு அலங்கார வேலையை செய்து தராமல் ஏமாற்றியுள்ளார். மேலும் செல்போன் இணைப்பையும் துண்டித்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சையது இப்ராஹிம் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி பெண்ணை தேடி வருகின்றனர்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்ற வாலிபர் திடீரென மாயமானார்.
- கிணற்றில பிணமாக கிடந்த வாலிபர் முகம் அடையாளம் காணமுடியாக அளவுக்கு சிதைந்து காணப்பட்டதால் மாயமான வாலிபரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முகமது தாவூது. விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் இம்ரான் ரியாஸ் (23). இவர் படித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்றவர் மாயமானார்.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த தேவாரம் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை தனது மகனை காணவில்லை என புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தேவாரம்-பாளையம் இடையே உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் இன்று ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு இறந்து கிடந்த வாலிபரின் உடலை மேலே கொண்டு வந்தனர். அப்போது கிணற்றில பிணமாக கிடந்த வாலிபர் முகம் அடையாளம் காணமுடியாக அளவுக்கு சிதைந்து காணப்பட்டது. எனவே இறந்தவர் இம்ரான் ரியாசா? அல்லது வேறு நபரா? என விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வாலிபர் கடந்த 3 நாட்களாக இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால் அதனை சர்வீஸ் நிலையத்தில் பழுது நீக்க நிறுத்தி இருந்தார்.
- அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஹெல்மெட் அணி யாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1000 அபராதம் என குறிப்பிடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மேலதெருவை சேர்ந்தவர் பிரவீன் காந்தி (30). இவர் சொந்தமாக புல்லட் இருசக்கர வாகனம் வைத்து ள்ளார். தனது தோட்டத்து விவசாய பணிக்காக இரட்டை வாய்க்கால்-மூணாறு சாலைக்கு சென்று வருவது வழக்கம்.
கடந்த 3 நாட்களாக இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால் அதனை சர்வீஸ் நிலையத்தில் பழுது நீக்க நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஹெல்மெட் அணி யாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1000 அபராதம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த கட்டண ரசீதில் யமஹா வாகனத்தின் படம் இடம் பெற்றிருந்தது. தான் புல்லட் வைத்திருந்த நிலை யில் யமஹா வாகன த்திற்கு அபராதம் என குறிப்பிட்டு தனது விலாசத்திற்கு வந்த கடிதத்தை எடுத்து க்கொண்டு மோட்டார் வாகன ஆய்வாளரிடம் விவரம் கேட்டார். உங்க ளுக்குதான் ரூ.1000 அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கட்ட வேண்டும் என தெரிவித்து ள்ளார்.
இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேறுஒரு பைக்கை இட ம்பெற செய்து ஒரு நபருக்கு ரூ.1000 அபராதம் என வந்தது. கூலித்தொழி லாளி யான அவர் தனக்கு விதிக்க ப்பட்ட அபராதத்தை நினைத்து அதிர்ச்சி அடைந்தார். போக்குவரத்து காவலர்கள் இதுபோல அஜாக்கிரதையாக ஏதோ ஒரு வாகனத்திற்கு அபரா தத்தை வேறு ஒருவருக்கு அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக வாகன ஓட்டிகள் தெரி விக்கின்றனர்.
- வாலிப்பாறை பகுதியில் கருங்காலி மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது
- சோதனையிட்டதில் 2 கருங்காலி மரக்கட்டைகள் கடத்திய 2 பேரிடம் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வாலிப்பாறை பகுதியில் கருங்காலி மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை யினர் தும்மக்குண்டு அருகே தேனி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ெகாண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த சாக்குபையை வாங்கி சோதனை யிட்டதில் 2 கரு ங்காலி மரக்க ட்டை கள் இருந்தது தெரிய வந்தது.
அவர்களை வன ச்சரக அலுவலக த்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த கட்டைகளை கடத்திய தும்மக்கு ண்டுவை சேர்ந்த அன்பு, தேனியை சேர்ந்த நரிக்குறவர் சுதாகர் என தெரியவரவே அவர்களை கைது செய்த னர். அவர்களிடமிருந்து ரூ.20ஆயிரம் மதிப்பிலான கருங்காலி மரக்கட்டைகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
வருசநாடு வனச்சரக த்திற்குட்பட்ட பகுதியில் அரியவகை மரங்கள் உள்ளன. குறிப்பாக கருங்காலி மரக்கட்டைகள் என்பது பல ஆண்டுகள் நிலைத்து வளரும் உறுதி யான மரமாகும். இந்த மரங்களை வெட்டி அதிலிருந்து ஜபமாலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாலையின் விலை ரூ.10ஆயிரம் முதல் பல ஆயிரம் வரை விலை கொண்டதாகும்.
இதனை அவரவர்கள் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளியாலான கம்பி களால் கோர்த்து பயன்படு த்தி வருகின்றனர். இதுபோ ன்ற அபூர்வ வகை மரக்க ட்டைகள் சர்வசாதாரண மாக கடத்தப்பட்டு வருகிறது. இதனைவெட்டும் போதே பிடிக்காமல் கடத்தி கொண்டுவரும்போது பிடித்து அபராதம் வசூலிக்கின்றனர். அபராதம் கட்டத்தவறினால் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கருங்காலி மரக்கட்டைகள் கடத்தப்பட்டுள்ளன. வனப்பகுதியில் தீ வைத்தும் மரக்கட்டைகளை கடத்தும் வேலையில் சமூகவிரோத கும்பல் ஈடுபட்டு வருகின்ற னர். எனவே இவ்விசயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- விரக்தி அடைந்த அவர் ஆட்டுக்கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே கோம்பையை சேர்ந்தவர் ராமநாதன்(82). நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் ஆட்டுக்கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






