என் மலர்
தேனி
- பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் உள்பட அனைத்து தரப்பின ரும் தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உருவாகியு ள்ளது.
- என பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
சின்னமனூர்:
சின்னமனூர் நகர் பகுதியில் உள்ள வார்டு களில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் உள்பட அனைத்து தரப்பின ரும் தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உருவாகியு ள்ளது.
இந்த மெத்தனப் போக்கை கண்டித்தும், பி.டி.ஆர். கால்வாயை தூர் வார வேண்டும் எனவும், நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார் நிறுவனத்தை மூட வேண்டும் என பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதில் சின்னமனூர் நகர பொதுச் செயலாளர் நேதாஜி குமார் என்ற வசீகரன், நிர்வாகிகள் தர்மராஜ், பிரபாகரன், வேலு மற்றும் ஏராள மானோர் கலந்து கொண்ட னர். போராட்டம் குறித்து அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
- 400 ஆண்டு பழமையான பாலசுப்பிர மணியன் கோவிலின் பின்புறம் 2 மருதமரங்கள் உள்ளது.
- இந்நிலையில் மர்மநபர்கள் மரத்தின் வேர்பகுதியில் தீ வைத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட 400 ஆண்டு பழமையான பாலசுப்பிர மணியன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் தீர்த்த தொட்டியும், அதன் அருகே 2 மருத மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.
இந்த மரத்தின் பட்டை பல்வேறு நோய்களை தீர்க்கும் குணம் கொண்ட தாகும். இந்நிலையில் மர்மநபர்கள் மரத்தின் வேர்பகுதியில் தீ வைத்து ச்சென்றனர்.
அடிப்பகுதியில் பற்றிய தீ மளமளவென பரவி மரம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணை த்தனர். இருந்தபோதும் மரத்தின் பெரும்பகுதி எரிந்து சேதமானது.
இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மரத்திற்கு தீ வைத்த நபர்களை கண்ட றிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மகள், மகன் மற்றும் மற்றொருவரது மகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி பாரஸ்ட் ரோடு 9-வது தெருவை சேர்ந்தவர் தவமணி மகள் யுவஸ்ரீ(17). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவ த்தன்று யுவஸ்ரீ திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
ஜெயமங்கலம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவரது மனைவி ஜெயபாரதி(22). மகன் திவாசன்(2), சிவக்குமார் கிரசர் நிறுவன த்தில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.
மீண்டும் வீடு திரும்பிய போது தனது மனைவி மற்றும் மகன் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தொடங்கி வைத்து கைத்தறி கண்காட்சியினை பார்வையிட்டார்.
- சுகாதாரத் துறையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது
ஆண்டிபட்டி:
9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டி ருந்த சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தொடங்கி வைத்து கைத்தறி கண்காட்சியினை பார்வையிட்டார்.
தேனி மாவட்டத்தில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மதுரை சுங்குடி சேலைகள், மென் பட்டு சேலைகள், பருத்தி நூல் சேலைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி ரகங்கள் காட்சி படுத்தப்பட்ட விற்பனையை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக 9 -வது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு. தேனி மாவட்டம் டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக சுகாதாரத் துறையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சர்க்கரை நோய், இரத்தம், சளி, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் கைத்தறி நெசவாளர்களின் குடும்பதத்தினர் 180 நபர்களுக்கு பரிசோதனை மேற்க்கொண்டு தேவை யான சிகிச்சை அளிக்க ப்பட்டது.
நிகழ்ச்சியில் டாக்டர் சண்முகப்பிரியா மேற்பார்வை யில் செவிலி யர்கள் கலந்து கொண்டனர். மதுரை, தேனி மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிர மணியன், சரக ஆய்வாளர் பாலமுரளிதரன், ஆய்வா ளர்கள் செண்பக ராஜ், ஜெயராமன், சரவணன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம்.
- பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. இது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5மாவட்ட மக்களின் விவ சாயத்திற்கும், குடிநீருக்கும் பிரதானமாக விளங்கி வருகிறது. அணைக்கு நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, மூலவைகை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை காரணமாகவும், பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் நீர்வரத்து இருக்கும்.
கடந்த சில மாதமாக வைகை அணை, பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. வைகை அணையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லை. கடந்த கோடை காலத்தில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பெரியாறு, வைகை அணையில் இருந்து நீர் ஆவியாகி குறைய தொடங்கியது. இதனால் அணைகளுக்கு நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம். இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.05 அடியாக உள்ளது. அணைக்கு 61 கன அடிநீர் வருகிறது. 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2836 மி.கன அடியாக உள்ளது. வைகை அணியின் நீர்மட்டம் 48.31 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. இருப்பு 1786 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 302.98 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.32 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. திறப்பு 3 கனஅடியாக உள்ளது. இருப்பு 32 மி.கன அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.
- குடிப்பழ க்கத்திற்கு அடிமையானதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- சம்பவத்தன்று வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவரை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
வருசநாடு:
மதுரை மாவட்டம் சேடபட்டி குப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த மொக்கையன்(69). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த சில வருடங்களாக தேனி மாவட்டம் ராஜதானி அருகில் உள்ள டி.சொக்கலிங்கபுரத்தில் உள்ள பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தார். குடிப்பழ க்கத்திற்கு அடிமையானதால் இவரது உடல்நிலை பாதி க்கப்பட்டது.
சம்பவத்தன்று வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த மொக்கையனை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- தேனி-பூதிப்புரம் ரோட்டில் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ஒருவர் பைக்கில் இருந்து தவறிவிழுந்தும் மற்றும் வேறொரு பைக் மோதி ஒருவரும் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள பூதிப்புரம் சுப்பிரமணி யன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன்(36). இவர் நகைபட்டறையில் வேலை பார்த்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி தேனி-பூதிப்புரம் ரோட்டில் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பைக்கில் இருந்து தவறிவிழுந்து படுகாயமடைந்தார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
ஆண்டிபட்டி அருகில் உள்ள டி.சுப்புலாபுரம் காசிநகரை சேர்ந்தவர் வேல்முருகன்(48). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்திற்கு சென்று விட்டு மதுரை மெயின்ரோ ட்டில் வந்து கொண்டிரு ந்தார்.
அப்போது மற்றொரு பைக் இவர் மீது மோதியதில் வேல்முருகன் படுகாயமடை ந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார்.
- மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அந்த பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்ததால் அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் வ.உ.சி.3-வது தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ்(37). இவரும் தீபா(31) என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஹரிகரசுதன் என்ற மகனும், விகாசினி என்ற மகளும் உள்ளனர். பாண்டியராஜ் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். தீபாவிற்கு கடந்த 2 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தன்று வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்த பாண்டியராஜ் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது தீபா மயக்கமடைந்த நிலையில் இருந்தார். உடனடியாக அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனது மனைவியின் சாவில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க வேண்டும் என அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கோம்பைதொழு, இந்திரா நகர் பகுதிகளில் பற்றிஎரியும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வரு கின்றன.
- வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தீயை அணைப்பத ற்கான நவீன உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றால் தீயை அணைக்க முடியவில்லை.
வருசநாடு:
தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் கோடைகாலங்களில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வழக்கம். தற்போது கடும் கோடை மற்றும் ஆடி மாத காற்று காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அதனை அணைக்க முடியாமல் வனத்துறை யினர் திணறி வருகின்றனர். கோம்பைதொழு, இந்திரா நகர் பகுதிகளில் பற்றிஎரியும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வரு கின்றன.
மேலும் வனவிலங்கு களும் இடம்பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் நிலை ஏற்பட்டு ள்ளது. வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தீயை அணைப்பத ற்கான நவீன உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றால் தீயை அணைக்க முடியவில்லை.
தொடர்ந்து பற்றிஎரியும் காட்டுத்தீயால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ள தோடு சமூகஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். காட்டுத்தீ ஏற்படும் சமயங்களில் இயற்கை வளம் அழிந்து வருவதால் வனத்தையும், வனவிலங்கு களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 2021-ம் ஆண்டுவரை சேலம் மாவட்டம் தாரமங்க லம் பேரூராட்சி செயல்அலு வலராக பணிபுரிந்து வந்தார்.
- தெருவிளக்குகள் பொருத்து தல், அத்தியவாசிய பொரு ட்கள் வாங்குதல் உள்ளிட்ட வற்றில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் மீது 18 புகார்கள் இயக்குனரக த்திற்கு அனுப்பப்பட்டது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவா ரம் பேரூராட்சி செயல்அலு வலராக பணிபுரிந்து வருபவர் குலோத்துங்கன். இவர் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியையும் கூடுத லாக கவனித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டுவரை சேலம் மாவட்டம் தாரமங்க லம் பேரூராட்சி செயல்அலு வலராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது பேரூ ராட்சியில் தெருவிளக்குகள் பொருத்து தல், அத்தியவாசிய பொரு ட்கள் வாங்குதல் உள்ளிட்ட வற்றில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் மீது 18 புகார்கள் இயக்குனரக த்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த புகார்கள் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு தேனி மாவட்டத்தி ற்கு மாற்றம் செய்யப்பட்டார். இவர் மீதான புகார்களில் முறைகேடுகள் நடந்தது உறுதியானது.
இதனை யடுத்து பேரூராட்சிகள் இயக்குனர் கிரண்குராலா, செயல்அலுவலர் குலோத்து ங்கனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். உத்தம பாளையம் பேரூராட்சி செயல்அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் தேவாரம் பேரூராட்சியை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.
- சம்பவத்தன்று கட்டிட வேலை செய்யு ம்போது எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார்.
- மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் உயிரிழந்த தொழி லாளியின் நியமனதாரர்க ளுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் விபத்து நிவாரணம் ரூ.5 லட்சம் கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்டம் போடி அருகே உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது39). கட்டுமானத்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கட்டிட வேலை செய்யு ம்போது எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார்.
இவரின் மனைவி புவனே ஸ்வரி நிவாரண தொகை வேண்டி விண்ணப்பி த்திரு ந்தார். அதன்படி மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் உயிரிழந்த தொழி லாளியின் நியமனதாரர்க ளுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் விபத்து நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.இதனை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழி லாளர் உதவி ஆணையர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரிந்து மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவியது.
- தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சனூத்து வனத்துறை சோதனை சாவடி அருகில் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரிந்து மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவியது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த அரியவகை மரம், செடிகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த காட்டுத்தீயால் அப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேகமலை வனத்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பல இடங்களில் பரவியதால் வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் சிரமப்பட்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தீத்தடுப்பு கோடுகள் அமைத்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே காட்டுத்தீ இயற்கையாக ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்களால் செயற்கையாக காட்டுத்தீ ஏற்படுத்தப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






