என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயனாளிக்கு நிவாரண ஆணையினை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
தேனியில் தொழிலாளர் நல வாரியம் சார்பில் ரூ.5 லட்சம் விபத்து நிவாரணம்
- சம்பவத்தன்று கட்டிட வேலை செய்யு ம்போது எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார்.
- மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் உயிரிழந்த தொழி லாளியின் நியமனதாரர்க ளுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் விபத்து நிவாரணம் ரூ.5 லட்சம் கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்டம் போடி அருகே உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது39). கட்டுமானத்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கட்டிட வேலை செய்யு ம்போது எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார்.
இவரின் மனைவி புவனே ஸ்வரி நிவாரண தொகை வேண்டி விண்ணப்பி த்திரு ந்தார். அதன்படி மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் உயிரிழந்த தொழி லாளியின் நியமனதாரர்க ளுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் விபத்து நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.இதனை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழி லாளர் உதவி ஆணையர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






