என் மலர்tooltip icon

    தேனி

    • தேனி-பூதிப்புரம் ரோட்டில் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ஒருவர் பைக்கில் இருந்து தவறிவிழுந்தும் மற்றும் வேறொரு பைக் மோதி ஒருவரும் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பூதிப்புரம் சுப்பிரமணி யன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன்(36). இவர் நகைபட்டறையில் வேலை பார்த்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி தேனி-பூதிப்புரம் ரோட்டில் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பைக்கில் இருந்து தவறிவிழுந்து படுகாயமடைந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    ஆண்டிபட்டி அருகில் உள்ள டி.சுப்புலாபுரம் காசிநகரை சேர்ந்தவர் வேல்முருகன்(48). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்திற்கு சென்று விட்டு மதுரை மெயின்ரோ ட்டில் வந்து கொண்டிரு ந்தார்.

    அப்போது மற்றொரு பைக் இவர் மீது மோதியதில் வேல்முருகன் படுகாயமடை ந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார்.
    • மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அந்த பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்ததால் அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் வ.உ.சி.3-வது தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ்(37). இவரும் தீபா(31) என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஹரிகரசுதன் என்ற மகனும், விகாசினி என்ற மகளும் உள்ளனர். பாண்டியராஜ் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். தீபாவிற்கு கடந்த 2 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்த பாண்டியராஜ் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது தீபா மயக்கமடைந்த நிலையில் இருந்தார். உடனடியாக அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனது மனைவியின் சாவில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க வேண்டும் என அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கோம்பைதொழு, இந்திரா நகர் பகுதிகளில் பற்றிஎரியும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வரு கின்றன.
    • வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தீயை அணைப்பத ற்கான நவீன உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றால் தீயை அணைக்க முடியவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் கோடைகாலங்களில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வழக்கம். தற்போது கடும் கோடை மற்றும் ஆடி மாத காற்று காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அதனை அணைக்க முடியாமல் வனத்துறை யினர் திணறி வருகின்றனர். கோம்பைதொழு, இந்திரா நகர் பகுதிகளில் பற்றிஎரியும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வரு கின்றன.

    மேலும் வனவிலங்கு களும் இடம்பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் நிலை ஏற்பட்டு ள்ளது. வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தீயை அணைப்பத ற்கான நவீன உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றால் தீயை அணைக்க முடியவில்லை.

    தொடர்ந்து பற்றிஎரியும் காட்டுத்தீயால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ள தோடு சமூகஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். காட்டுத்தீ ஏற்படும் சமயங்களில் இயற்கை வளம் அழிந்து வருவதால் வனத்தையும், வனவிலங்கு களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டுவரை சேலம் மாவட்டம் தாரமங்க லம் பேரூராட்சி செயல்அலு வலராக பணிபுரிந்து வந்தார்.
    • தெருவிளக்குகள் பொருத்து தல், அத்தியவாசிய பொரு ட்கள் வாங்குதல் உள்ளிட்ட வற்றில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் மீது 18 புகார்கள் இயக்குனரக த்திற்கு அனுப்பப்பட்டது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவா ரம் பேரூராட்சி செயல்அலு வலராக பணிபுரிந்து வருபவர் குலோத்துங்கன். இவர் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியையும் கூடுத லாக கவனித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டுவரை சேலம் மாவட்டம் தாரமங்க லம் பேரூராட்சி செயல்அலு வலராக பணிபுரிந்து வந்தார்.

    அப்போது பேரூ ராட்சியில் தெருவிளக்குகள் பொருத்து தல், அத்தியவாசிய பொரு ட்கள் வாங்குதல் உள்ளிட்ட வற்றில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் மீது 18 புகார்கள் இயக்குனரக த்திற்கு அனுப்பப்பட்டது.

    இந்த புகார்கள் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு தேனி மாவட்டத்தி ற்கு மாற்றம் செய்யப்பட்டார். இவர் மீதான புகார்களில் முறைகேடுகள் நடந்தது உறுதியானது.

    இதனை யடுத்து பேரூராட்சிகள் இயக்குனர் கிரண்குராலா, செயல்அலுவலர் குலோத்து ங்கனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். உத்தம பாளையம் பேரூராட்சி செயல்அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் தேவாரம் பேரூராட்சியை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    • சம்பவத்தன்று கட்டிட வேலை செய்யு ம்போது எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார்.
    • மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் உயிரிழந்த தொழி லாளியின் நியமனதாரர்க ளுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் விபத்து நிவாரணம் ரூ.5 லட்சம் கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி அருகே உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது39). கட்டுமானத்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கட்டிட வேலை செய்யு ம்போது எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார்.

    இவரின் மனைவி புவனே ஸ்வரி நிவாரண தொகை வேண்டி விண்ணப்பி த்திரு ந்தார். அதன்படி மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் உயிரிழந்த தொழி லாளியின் நியமனதாரர்க ளுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் விபத்து நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.இதனை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொழி லாளர் உதவி ஆணையர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரிந்து மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவியது.
    • தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சனூத்து வனத்துறை சோதனை சாவடி அருகில் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரிந்து மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவியது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த அரியவகை மரம், செடிகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த காட்டுத்தீயால் அப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேகமலை வனத்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பல இடங்களில் பரவியதால் வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் சிரமப்பட்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தீத்தடுப்பு கோடுகள் அமைத்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே காட்டுத்தீ இயற்கையாக ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்களால் செயற்கையாக காட்டுத்தீ ஏற்படுத்தப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கிறது. மேலும் சாலையின் குறுக்கே திடீரென கூட்டமாக வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
    • தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    போடி:

    போடி நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கிறது. மேலும் சாலையின் குறுக்கே திடீரென கூட்டமாக வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். தெருநாய்கள் தொல்லை யால் குழந்தைகளை தெருவில் விளையாட பெற்றோர் அனுமதிப்ப தில்லை. மேலும் பெரியவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணி க்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் மற்றும் ஆணையாளர் ராஜலட்சுமி ஆகியோர் உத்தரவிட்டனர். அதன் பேரில் நகராட்சி பகுதியில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதில் முதல் கட்டமாக 200 நாய்கள் பிடிக்கப்பட்டது. அந்த நாய்களுக்கு போடி மயானக்கரை ரோட்டில் உள்ள நகராட்சி கருத்தடை மையத்தில் வைத்து விலங்கு கள் நல வாரி யத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திருநெல்வேலி நிறுவனம் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அந்த நாய்களுக்கு கால்நடை மருத்துவர் மூலம் வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்த பணிகள் துப்புரவு ஆய்வா ளர்கள் மணிகண்டன், சுரேஷ்குமார், அகமது கபீர், கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் நடை பெற்றது.

    • தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் 8-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் தேனியில் நடைபெற்றது.
    • தேனி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் 8-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன். ரவி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இராமராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சோலைராஜன் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விஜயா எலக்ட்ரிக்கல் உரிமையாளர் பாலாஜி, வினோரா பவுண்டேசன் நிறுவனர் ராஜன் மற்றும் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட தேனி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று 350-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் மற்றும் ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட பொதுச்செய லாளர் மாய.லோகநாதன் நன்றி கூறினார்.

    • போடி சில்லமரத்து ப்பட்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் தோட்டத்தில் இரும்பு கம்பிகள் வைத்தி ருந்தார்.
    • இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி சில்லமரத்து ப்பட்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது52). இவரது தோட்டத்தில் இரும்பு கம்பிகள் வைத்தி ருந்தார்.

    அதனை ஜீவா காலனியை சேர்ந்த பூபதி (23), பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகேஸ் (22), மதுரை வீரன் தெருவை சேர்ந்த பாண்டிமுருகன் (23) ஆகியோர் திருடிச் சென்றனர்.

    இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். சம்பவத்தன்று தனியார் பண்ணைக்கு அருகே மறைந்திருந்த அவர்கள் 3 பேரையும் பிடித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சண்முகவேல் ஒப்படைத்தார். போலீசார்அவர்களை கைது செய்து இரும்பு கம்பிகளையும் பறிமுதல் செய்தனர்.

    • பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி, மேல்ம ங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி வழியாக தேவ தானப்பட்டி மெயி ன்ரோ ட்டை அடைவதற்கு போதிய பஸ்கள் இயக்கப்படு வதில்லை.
    • மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்ப டைந்து வருகின்ற னர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் வடுக பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், பொம்மி நாயக்கன்பட்டி, சில்வா ர்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு சொந்த பணி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாண வர்களும் செல்கின்றனர். 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியூருக்கு சென்றுவரும் நிலையில் பெரியகுளத்தில் இருந்து ஆண்டிபட்டி வழித்தடத்திற்கு அதிக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி, மேல்ம ங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி வழியாக தேவ தானப்பட்டி மெயி ன்ரோ ட்டை அடைவதற்கு போதிய பஸ்கள் இயக்கப்படு வதில்லை. இதனால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்ப டைந்து வருகின்ற னர். குறிப்பாக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக செல்பவர்கள் போக்குவரத்து வசதி பற்றாக்குறையால் சிரமமடைந்து வருகின்றனர்.

    எனவே தேவதானப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து ஜெயமங்கலம் வழியாக க.விலக்கிற்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மற்ற வழித்தடங்களை போலவே இந்த வழித்த டத்திலும் போதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • இந்த வளாகத்தில் 70திற்கும் மேற்பட்ட வணிக கடைகள், விவசாயிகள் தங்கும் அறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் தடையின்றி வந்து செல்ல சாலை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.
    • வருகின்ற 10ந் தேதி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விவசாயிகள், வியாபாரிக ளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

    சின்னமனூர்:

    தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சின்னமனூர் நகரில் முதன் முதலாக மெகா மொத்த காய்கறி வளாகம் அமைப்பதற் கான கோரி க்கையை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறினேன்.

    அதனை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார். தற்போது ரூ. 37 கோடி நிதியில் சின்னமனூரில் அமைக்க உத்தரவிட்டு ள்ளார்.

    தமிழகத்தில் கோவை, குனியமுத்தூர் பகுதியிலும், நாகர்கோவில் மார்த்தாண்டத்திலும் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயன் பெறும் விதமாக மெகா காய்கறி மொத்த வளாகச் சந்தையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூரில் தமிழக த்தின் 3வது இடமாக தேனி மாவட்டத்தின் முதல் இடமாக அமைய இருக்கிறது.இந்த வளாகத்தில் 70திற்கும் மேற்பட்ட வணிக கடைகள், விவசாயிகள் தங்கும் அறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் தடையின்றி வந்து செல்ல சாலை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.

    இதில் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட விகிதத்தில் நல்ல விலை நிர்ணயமாக கிடைப்பதற்கு வழி வகை ஏற்படுத்தப்படும். வெளி நாடுகளுக்கு வாழை மற்றும் காய் கறிகளை கொண்டு செல்வதற்கு சரியான கட்டமைப்பு இல்லாததால் இங்கு உருவா க்கப்பட்டு வெளிநாடு களுக்கு அனுப்பி வைப்ப தற்கு சந்தைப்படுத்து வதற்கும் அனைத்து பணி களும் இங்கு நடைபெறும்.

    அதற்காக 4 ஏக்கரில் ரூ.37 கோடி மதிப்பில் செயல் படுத்தப்பட இருக்கி றது. வருகின்ற 10ந் தேதி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விவசாயிகள், வியாபாரிக ளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இப்பகுதியில் 14000 ஹெக்டேரில் ஜி9 வாழை, நேந்திரம், நாளிப் பூவன் உள்ளிட்ட வாழைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிகளவில் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    2023- 24 ஆண்டு வேளாண்மை துறை சார்பில் ரூ.130 கோடியில் வாழை காய்கறிகளை பாதுகாக்க குளிரூட்டும் தொழிற்சாலை 5 ஏக்கரில் உருவாக்கப்பட இருக்கிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள்.

    மின்சாரம் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் துணை மின்நிலையம் அமைப்பதற்கு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. மேலும் 10கும் மேற்பட்ட மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு பழுது ஆகாத பியூஸ் போகாத ளவிற்கு சின்னமனூர் 27 வார்டுகளில் வெளிச்சத்தி ற்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஒரு வருடத்திற்குள் தேனி மாவட்டம் உள்பட சின்ன மனூரில் அதிகளவு விவசா யம் நடை பெறுவதால் பெரும் வர்த்தக மையமாக சின்னமனூர் அமையும் என்று கூறினார்.

    அப்போது நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், சின்னமனூர் தி.மு.க. பிரமுகர் பஞ்சாப்முத்துக்குமரன், மாவட்ட விவசாய தொழி லாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட விவசாய அணி அக்கீம் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • ராயப்பன்பட்டி, அணைப்பட்டி பகுதிகளில் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவரை கைது செய்து கஞ்சா மற்றும் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து ராயப்பன்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சண்முகாநதி அணை செல்லும் பாதையில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை நடப்பதாக மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராயப்பன்பட்டி, அணைப்பட்டி பகுதிகளில் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சண்முகா நதி அணை செல்லும் சாலையில் உள்ள நேரு என்பவரது வீட்டை சோதனையிட்டனர். அதில் அவர் 300 கிராம் கஞ்சா மற்றும் 5 டெட்டனேட்டர்கள் பதுக்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நேருவை கைது செய்து கஞ்சா மற்றும் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து ராயப்பன்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் அவரது மகன் கவுதமுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை பிடித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×