உத்தமபாளையத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் மாயம்

வீட்டைவிட்டு வெளியே சென்ற வாலிபர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன்(24). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த லட்சுமி(33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று மது அருந்திவந்த பாண்டிய ராஜன் தனது மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் காலை வீட்டைவிட்டு வெளியே சென்ற பாண்டியராஜன் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தம பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பாண்டி யராஜனை தேடிவருகின்ற னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com