என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி: இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பொது நூலகம்-கரையான் அரித்த அரிய வகை புத்தகங்கள்
    X

    கரையான் அரித்து சேதமாகியுள்ள புத்தகங்களை படத்தில் காணலாம்.

    போடி: இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பொது நூலகம்-கரையான் அரித்த அரிய வகை புத்தகங்கள்

    • கட்டிடம் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு மேலானதால் ஏற்பட்ட விரிசல் காரணமாக மழைக்காலத்தில் உள்ளே தண்ணீர் புகுந்து சுவர் முழுதும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
    • சுவரில் உள்ள சேதம் காரணமாக கரையான்கள் புகுந்து பல அரிய வகை புத்தகங்களை அரித்து முற்றிலும் சேதமாக்கி உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் மையப் பகுதியில் போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் தமிழ்நாடு அரசு பொது நூலகம் அமைந்து ள்ளது. சுமார் 65 ஆண்டு களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நூலகம் 1970ம் ஆண்டு புதிதாக கட்டிடம் உருவாக்கப்பட்டு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நூலகத்தில் வரலாறு, அறிவியல், சமூகம், புராணம் மற்றும் சிறுகதைகள், கவிதைகள், கதைகள், போட்டித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சுமார் 75,000க்கும் மேல் உள்ளது.

    கலைஞரின் குறளோவி யம், பொன்னியின் செல்வன்,சோழர் கால வரலாறு, பாண்டியர்கள் வரலாறு மற்றும் அறிவியல் திறனாய்வு புத்தகங்கள், அறிஞர் அண்ணா எழுதிய நூல்கள் போன்ற பல்வேறு பிரசித்தி பெற்ற நூல்கள் இங்கு உள்ளது.

    சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாசகர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

    மேலும் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த நூலகத்தை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். பழைய கிணறு ஒன்றை மூடி அதன் மேல் கட்டிடம் கட்டப்பட்டதால் தற்போது அஸ்திவாரம் இறங்கி கட்டிடம் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.

    மேலும் கட்டிடம் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு மேலானதால் ஏற்பட்ட விரிசல் காரணமாக மழைக்காலத்தில் உள்ளே தண்ணீர் புகுந்து சுவர் முழுதும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

    இதனால் எப்பொழுது இடிந்து விழுமோ என்ற அபாய கட்டத்தில் இந்த கட்டிடம் உள்ளது. இதனால் இந்த நூலகத்திற்கு வரும் வாசகர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களும் பொது மக்களும் மிகுந்த அச்சத்து டனே வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் இங்குள்ள புத்தகங்களில் சுமார் 20000 புத்தகத்திற்கு மேல் பரணிலும் சுவர் ஓரங்க ளிலும் பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால் சுவரில் உள்ள சேதம் காரணமாக கரையான்கள் புகுந்து பல அரிய வகை புத்தகங்களை அரித்து முற்றிலும் சேதமாக்கி உள்ளது. எனவே மக்களின் பயன்பாட்டில் உள்ள நூல கத்தில் உள்ள புத்தகங்களை பாதுகாக்கவும், கட்டிடத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×