என் மலர்tooltip icon

    தேனி

    • சிறுகுறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மன்றத்தில் விவசாயிகள் குறைந்த வாடகைசெலுத்தி உழவு பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

    சின்னமனூர்:

    சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சிக்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்துவிடவும் ரூ.9.75 லட்சம் மதிப்புள்ள புதிய டிராக்டரை வழங்கினார். சிறுகுறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மன்றத்தில் விவசாயிகள் குறைந்த வாடகைசெலுத்தி உழவு பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதே போல ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. அப்பள்ளியில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க சென்ற மாணவி சிவசக்திக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ அறிவித்தார்.

    இதில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பெருந்தலைவர் நிவேதா அண்ணாதுரை, காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து, தேனி மாவட்ட விவசாய தொழிலாளர்அணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் பல நிர்வாகிகளும், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேனி மாவட்டத்தில் செல்போன் தொலைந்ததாக கிடைத்த புகாரின் படி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மீட்கப்பட்ட சுமார் ரூ.16 லட்சம் மதிப்புள்ள 156 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் செல்போன் தொலைந்ததாக கிடைத்த புகாரின் படி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மீட்கப்பட்ட சுமார் ரூ.16 லட்சம் மதிப்புள்ள 156 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., அபிநவ்குமார் மற்றும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். கடந்த 7 மாதத்தில் மட்டும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீசாரால் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 668 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் உடனடி யாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • திறந்தவெளி கிணறு கள். கட்டுமான குழிகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் குவாரி குழிகளுக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம், ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள். திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவற்றின் இருப்பிடங்களின் பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்க ளின் விரிவான பதிவைப் பராமரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் கட்ட ப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கிணறுகள், உடனடியாக மூடப்பட வேண்டும். கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் உடனடி யாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திறந்தவெளி கிணறு கள். கட்டுமான குழிகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் குவாரி குழிகளுக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம், ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும்.

    மேலும், சாலையோர ங்களில் உள்ள கால்வாய்க ளில், சாலை பயன்பாட்டா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, சாலையோரங்களில் கட்டுமானப் பணிக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் கால்வாய்களின் இருப்பை அறிவுறுத்தும் பொருட்டு ஒட்டுனர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும்.

    இந்த பாதுகாப்பு நட வடிக்கைகளை செயல்படு த்துவதற்கு மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளாட்சி அமைப்பு களுடன் இணைந்து பணிகளை விரைந்து செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்து ள்ளார்.

    • கடந்த சில நாட்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைத்து அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் பணிகள் நிறுத்த போராட்டம் நடை பெறும் என ஒன்றிய ஆணை யருக்கு மனு அளிக்கப்பட்டது.
    • ஒப்பந்ததாரர்க ளின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கிராமங்களில் அரசு ஒப்பந்த பணிகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் சாக்கடை வடிகால், சிமெண்டுரோடு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்த பணிகள் அனைத்தும் வருடத்திற்கு ஒருமுறை அதிகாரிகளால் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு பின்னர் ஒன்றிய நிர்வாகம் மூலம் நிலுவையில் உள்ள வைப்பு தொகை ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வருடம் ஏராளமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் முறையாக கணக்கு தணிக்கை செய்த பின்பும் ஒப்பந்ததாரர்க ளுக்கு வைப்பு தொகை வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் வைப்புத் தொகையை வழங்க சில அதிகாரிகள் குறிப்பிட்ட சதவீதம் அடிப்படையில் கமிஷன் தொகை கேட்க ப்படுவதாகவும் ஒப்பந்ததார ர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஒப்பந்த தாரர்கள் பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி யும் வைப்புத்தொகை வழங்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைத்து அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் பணிகள் நிறுத்த போராட்டம் நடை பெறும் என ஒன்றிய ஆணை யருக்கு மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படா ததை தொடர்ந்து ஒப்பந்த தாரர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் நிலுவையில் உள்ள வைப்புத் தொகையை விரைந்து வழங்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என துண்டு பிரசுரங்களை அச்சிட்டு அதனை ஒன்றிய அலுவலக சுவர்களில் ஒட்டினர்.

    மேலும் தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் அலுவல கங்களுக்கு சென்று வைப்புத் தொகையை வழங்க கோரி மனு அளித்தனர். ஒப்பந்ததாரர்க ளின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கிராமங்களில் அரசு ஒப்பந்த பணிகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டது. கிராமங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை, நூலகம் ஆகிய இடங்களில் வேம்பு, கொய்யா, நாவல், புங்கம் உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற செயலர் செய்திருந்தார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், துணைத் தலைவர் பிரியா தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஆணையர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கடமலைக்குண்டுவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை, நூலகம் ஆகிய இடங்களில் வேம்பு, கொய்யா, நாவல், புங்கம் உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற செயலர் சின்னச்சாமி செய்திருந்தார்.

    • குள்ளப்புரம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள் செயல்பட்டு வருகிறது.
    • குள்ளப்புரம் கிராம மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் இணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியாகும் தூசியால் குள்ளப்புரம் கிராம மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வந்தனர்.

    குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தக்காளி, வெண்டை, கத்தரி, வாழை, தென்னை உள்ளிட்ட நிலங்களும் பாதிப்படைந்து வந்தன. வீடுகளுக்குள் தூசி படர்ந்து காணப்பட்டதுடன் உணவு, குடிநீரிலும் நச்சு கலக்கும் நிலை உருவானது.

    இரவு பகல் பாராமல் 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் செல்வதால் தூக்கமின்றி தவித்து வந்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

    எனவே குள்ளப்புரம் கிராம மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் இணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரி மற்றும் கிரசர்களை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • குமுளி அருகே முக்காலேகர் பகுதியில் புலியின் கால்தடங்கள் தென்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    • கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டத்தை கண்கா ணிக்க முடிவு செய்துள்ளனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே முக்காலேகர் பகுதியில் புலியின் கால்தடங்கள் தென்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி யில் கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டத்தை கண்கா ணிக்க முடிவு செய்துள்ள னர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தென்பட்ட புலி கால்தட ங்களின் அடையாளங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. முக்காலேகர் பகுதி அதிக குடியிருப்புகளை கொண்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

    இப்பிரச்சினைக்கு வனத்துறையினர் விரைந்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிமாலி நகரில் இருந்து சில கி.மீ தொலைவில் புலி நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது இங்கு உலாவி வரும் புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • முதியவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர் :

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது73). இவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு நெல் வாங்கி வர சென்றார். அப்போது நெல் மூட்டையுடன் தவறி கீழே விழுந்தார்.

    படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சமுதாய கூடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாடின்றி போனது.
    • அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பாறை‌ கிராமத்தில் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே மூலக்கடை ஊராட்சியில் அமைந்துள்ள சிறப்பாறை கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமு தாயக்கூடம் கட்டப்பட்டது. போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சமுதாய கூடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாடின்றி போனது.

    மேலும் சமுதாயக்கூடத்தை சுற்றிலும் முட்செடிகள் ஆக்கிரமித்து காணப்படு கிறது. சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சிறப்பாறை கிராம பொது மக்கள் தொடர்ந்து கோரி க்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றி யுள்ளனர்.

    ஆனாலும் தற்போது வரை சமுதாய க்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் சமுதாயக்கூடத்தை சிலர் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    சமுதாயக்கூடம் இல்லாத காரணத்தால் கிராம பொதுமக்கள் அவர்களது வீட்டு விஷேசங்களுக்கு வேறு கிராமங்களில் உள்ள தனியார் மண்டபங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பாறைகிராமத்தில் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேரிகார்டுகளை கடந்து செல்ல 2 வாகன ங்களும் முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மற்றும் லாரி நேருக்கு நேராக மோதியது.
    • அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் பஸ் மற்றும் காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்ட எல்லை யான தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு பேரிகார்டு அமைத்து வாகனங்களை சோதனை செய்து போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மதுரை யில் இருந்து பெரியகுளம் நோக்கி அரசு பஸ் சென்றது. அப்போது எதிரே முட்டை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. பேரிகார்டுகளை கடந்து செல்ல 2 வாகன ங்களும் முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மற்றும் லாரி நேருக்கு நேராக மோதியது.

    இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த கார்களும் அடுத்துடுத்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் லாரியின் முன் பக்கம் முற்றி லுமாக சேதம் அடைந்து டிரைவர் உடுமலைப்பேட் ைட அருகே மடத்துக்கு ளத்தை சேர்ந்த அருண்குமார் (வயது30) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் பஸ் மற்றும் காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை தேவதான ப்பட்டி போலீசார் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதி யில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • சாலையோரங்களில் உணவு வகைகள் தயார் செய்வதை உறுதி செய்வதற்காக வரப்பெற்ற நடமாடும் பகுப்பாய்வுக் கூடம் வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கிவைத்தார்.
    • பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உணவு ப்பொருள் குறித்த ஏதேனும் புகார் இருப்பின் மாநில வாடஸ்-அப் புகார் எண்ணிற்கும், நுகர்வோர் புகார் செயலியிலும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாலையோர ங்களில் உணவு வகைகள் தயார் செய்வதை உறுதி செய்வதற்காக வரப்பெற்ற நடமாடும் பகுப்பாய்வுக் கூடம் வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கிவைத்தார்.

    தேனி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருவதை உறுதி செய்வதற்காகவும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுகள் தரமாக உள்ளதா என பாரிசோதனை மேற்கொள்ள மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும், துரித உணவு விற்பனைக் கடைகள், பள்ளி, மருத்துவமனை, பஸ் நிலையம், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள உணவுப்பொருள் விற்பனைக் கடைகளில் இந்த நடமாடும் வாகனம் சென்று கடைகளில் சமைத்த உணவு பண்டங்களின் மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக் கூட வாகனத்தில் சோதனை செய்வதற்காக வரப்பெற்று ள்ளது.

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உணவு ப்பொருள் குறித்த ஏதேனும் புகார் இருப்பின் மாநில வாடஸ்-அப் புகார் எண்ணிற்கும், நுகர்வோர் புகார் செயலியிலும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மதன்குமார், ஜனகர் ஜோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • 100 நாள் வேலைதிட்டத்தில் பழைய கணக்கெடுப்புபடி பணி ஒதுக்குவதால் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
    • எங்களுக்கும் பணி ஒதுக்கிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சிக்குட்பட்ட குப்பாம்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள ஏழைஎளிய மக்களுக்காக 100 நாள் வேலைதிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2009-ம் ஆண்டு 247 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாள் வேலைதிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரு கின்றனர்.

    தற்போது இப்பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கும் பணி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பழைய கணக்கெடுப்புபடியே பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால் ஆத்திர மடைந்த கிராம பெண்கள் குப்பாம்பட்டி பகுதியில் 100 நாள் வேலைதிட்ட பணி யாளர்கள் வேலை செய்த இடத்தில் முற்றுகையிட்ட னர்.

    அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் வேலைதிட்டத்தில் பழைய கணக்கெடுப்புபடி பணி ஒதுக்குவதால் முறைகேடு கள் நடைபெற்று வருகிறது.

    எங்களுக்கும் பணி ஒதுக்கிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதி அளித்தனர். இருந்தபோதும் ஏராள மானோர் அப்பகுதியில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×