வருசநாடு அருகே சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சமுதாய கூடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாடின்றி போனது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பாறை‌ கிராமத்தில் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பராமரிப்பின்றி காணப்படும் சமுதாய கூடம்.
பராமரிப்பின்றி காணப்படும் சமுதாய கூடம்.
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே மூலக்கடை ஊராட்சியில் அமைந்துள்ள சிறப்பாறை கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமு தாயக்கூடம் கட்டப்பட்டது. போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சமுதாய கூடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாடின்றி போனது.

மேலும் சமுதாயக்கூடத்தை சுற்றிலும் முட்செடிகள் ஆக்கிரமித்து காணப்படு கிறது. சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சிறப்பாறை கிராம பொது மக்கள் தொடர்ந்து கோரி க்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றி யுள்ளனர்.

ஆனாலும் தற்போது வரை சமுதாய க்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் சமுதாயக்கூடத்தை சிலர் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சமுதாயக்கூடம் இல்லாத காரணத்தால் கிராம பொதுமக்கள் அவர்களது வீட்டு விஷேசங்களுக்கு வேறு கிராமங்களில் உள்ள தனியார் மண்டபங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பாறைகிராமத்தில் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com