என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிகள் நிறுத்த போராட்டம்"

    • கடந்த சில நாட்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைத்து அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் பணிகள் நிறுத்த போராட்டம் நடை பெறும் என ஒன்றிய ஆணை யருக்கு மனு அளிக்கப்பட்டது.
    • ஒப்பந்ததாரர்க ளின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கிராமங்களில் அரசு ஒப்பந்த பணிகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் சாக்கடை வடிகால், சிமெண்டுரோடு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்த பணிகள் அனைத்தும் வருடத்திற்கு ஒருமுறை அதிகாரிகளால் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு பின்னர் ஒன்றிய நிர்வாகம் மூலம் நிலுவையில் உள்ள வைப்பு தொகை ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வருடம் ஏராளமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் முறையாக கணக்கு தணிக்கை செய்த பின்பும் ஒப்பந்ததாரர்க ளுக்கு வைப்பு தொகை வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் வைப்புத் தொகையை வழங்க சில அதிகாரிகள் குறிப்பிட்ட சதவீதம் அடிப்படையில் கமிஷன் தொகை கேட்க ப்படுவதாகவும் ஒப்பந்ததார ர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஒப்பந்த தாரர்கள் பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி யும் வைப்புத்தொகை வழங்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைத்து அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் பணிகள் நிறுத்த போராட்டம் நடை பெறும் என ஒன்றிய ஆணை யருக்கு மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படா ததை தொடர்ந்து ஒப்பந்த தாரர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் நிலுவையில் உள்ள வைப்புத் தொகையை விரைந்து வழங்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என துண்டு பிரசுரங்களை அச்சிட்டு அதனை ஒன்றிய அலுவலக சுவர்களில் ஒட்டினர்.

    மேலும் தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் அலுவல கங்களுக்கு சென்று வைப்புத் தொகையை வழங்க கோரி மனு அளித்தனர். ஒப்பந்ததாரர்க ளின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கிராமங்களில் அரசு ஒப்பந்த பணிகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டது. கிராமங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×